உலகம்

ஒரே விசா, ஒரே பாஸ்போர்ட்.. அனைவரையும் ஏமாற்றி உலகம் சுற்றிய இரட்டையர்கள்.. சிக்கியது எப்படி ?

சீனாவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தங்களது ஒத்த அடையாளத்தை வைத்து கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானம் மூலம் சென்று வந்திருப்பது அண்மையில் தெரிய வந்திருக்கிறது.

ஒரே விசா, ஒரே பாஸ்போர்ட்.. அனைவரையும் ஏமாற்றி உலகம் சுற்றிய இரட்டையர்கள்.. சிக்கியது எப்படி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சீனாவின் வடக்கு பகுதியில் இருக்கும் ஹார்பின் நகரத்தைச் சேர்ந்த Zhou Mouhong மற்றும் Zhou Mouwei ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள். இதில் Zhou Mouhong ஜப்பானை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார். கணவருடன் ஜப்பான் செல்வதற்காக விசாவுக்கு பல முறை விண்ணப்பித்தும் Zhou Mouhong-க்கு விசா கிடைக்கவில்லை.

ஒரே விசா, ஒரே பாஸ்போர்ட்.. அனைவரையும் ஏமாற்றி உலகம் சுற்றிய இரட்டையர்கள்.. சிக்கியது எப்படி ?

இதனால் வேறு வழியின்றி தனது இரட்டை சகோதரியிடம் உள்ள விசா மற்றும் பாஸ்போர்ட்டை வைத்து Zhou Mouhong ஜப்பானுக்கு தனது கணவரோடு சென்றுள்ளார். முதல் முறை அவர் இவ்வாறு சென்ற நிலையில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக இதே வழிமுறையை பின்பற்றி, இரட்டையர்கள் இருவரும் ஒருவர் விசா மற்றும் பாஸ்போர்ட்டை வைத்து மாறி மாறி உலகில் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளனர். அதிலும் ஜப்பான், ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு 30-க்கும் அதிகமான முறை பயணம் செய்துள்ளனர்.

ஒரே விசா, ஒரே பாஸ்போர்ட்.. அனைவரையும் ஏமாற்றி உலகம் சுற்றிய இரட்டையர்கள்.. சிக்கியது எப்படி ?

இந்த நிலையில் இதே பாணியில் ஒருமுறை Zhou Mouhong தனது கணவரோடு ஜப்பானுக்கு சென்றபோது இவரின் விசா ஆவணத்தின் மீது அதிகாரி ஒருவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அவர் இது குறித்து விசாரணை செய்ததில் இரட்டை சகோதரிகளின் இந்த தில்லு முள்ளு வெளியே வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மோசடி வழக்கில் இரட்டை சகோதரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories