இந்தியா

”முடிந்தால் நீங்க கன்னடத்தில் பேசுங்கள் பார்ப்போம்” - கோவாவில் படகு சவாரியின் போது சவால் விட்ட பெண்!

இந்தியில் பேசச்சொல்லி கட்டாயப்படுத்திய வடமாநில கும்பலுக்கு கன்னடத்தில் பேசச்சொல்லி சவால் விடுத்த சம்பவம் கோவாவில் படகு சவாரியின் போது நடைபெற்றிருக்கிறது.

”முடிந்தால் நீங்க கன்னடத்தில் பேசுங்கள் பார்ப்போம்” - கோவாவில் படகு சவாரியின் போது சவால் விட்ட பெண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் இந்தி மொழியை திணிக்கும் பாஜக உள்ளிட்ட இந்துத்வவாதிகளின் சதி திட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு எழுந்த வண்ணம் உள்ளது.

அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கிலத்தை புறக்கணித்து அனைவரும் இந்தி மொழிக்கு மாற வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ஆனால் பிரதமர் மோடியோ மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறுகிறார். இப்படியாக இரட்டை வேடம் போட்டு கபட நாடகம் ஆடுவதையே பா.ஜ.கவினர் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

ஆகவே இந்தி திணிப்புக்கு எதிராக நாடு முழுவதுமே எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. அந்த வகையில், சமீபத்தில் கோவாவில் உள்ள படகு குழாம் பகுதியில் சவாரி செய்ய வந்த சுற்றுலா பயணிகள் குழுவிடம் வடமாநிலத்தைச் சேர்ந்த பயணிகள் குழு ஒன்று இந்தியில் பேசும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறது.

பதிலுக்கு அந்த பயணிகள் குழுவில் இருந்த பெண் ஒருவர், எங்கே உங்களால் முடிந்தால் கன்னடம் பேசுங்கள் பார்க்கலாம் என எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறார். இதனை அடுத்து மறுமுனையில் இருந்த வடமாநில கும்பல் இந்தி.. இந்தி.. என கோஷமிட, பதிலுக்கு பெண்கள் குழுக்களும் கன்னடம்.. கன்னடம் என குரல் கொடுத்திருக்கிறார்கள்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 66 ஆயிரத்துக்கும் மேலானோர் அந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories