சினிமா

’மைக்கை வீசி அநாகரிமாக நடந்து கொண்டேன்.. மன்னித்து விடுங்கள்..’ - இசை விழாவை பரபரக்க வைத்த பார்த்திபன்!

மைக்கை தூக்கி வீசிய விவகாரத்தில் மன்னிப்பு கேட்டார் பார்த்திபன்.

’மைக்கை வீசி அநாகரிமாக நடந்து கொண்டேன்.. மன்னித்து விடுங்கள்..’ - இசை விழாவை பரபரக்க வைத்த பார்த்திபன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகரும் இயக்குநருமான பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மே 1) நடைபெற்றது. இதில், படத்தின் இசையமைப்பாளாரான ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்று பாடலை வெளியிட்டிருந்தார்.

அப்போது, மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பார்த்திபனும் பேசுவதாக இருந்தது. அப்போது ஏ.ஆர்.ரஹ்மானுடன் பார்த்திபன் உரையாடிக் கொண்டிருக்கையில், பார்த்திபனின் மைக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யாமல் போயிருக்கிறது.

’மைக்கை வீசி அநாகரிமாக நடந்து கொண்டேன்.. மன்னித்து விடுங்கள்..’ - இசை விழாவை பரபரக்க வைத்த பார்த்திபன்!

இதனால் ஆத்திரமான பார்த்திபன், இதை முன்பே கேட்டு சரி செய்திருக்கக் கூடாதா என்று கடுப்பானவர் கையில் இருந்த மைக்கை தூக்கி வீசினார். இந்த செயல் விழா அரங்கில் இருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் சுதாரித்த பார்த்திபன், அநாகரிகமாகவே நடந்து கொண்டேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியிருந்தார். இதனால் பரபரப்பு தணிந்து விழா மீண்டும் தொடர்ந்தது.

தற்போது இது தொடர்பான வீடியோதான சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories