சினிமா

“என் அம்மாவை விட பெரிய கடவுள் யாரு?” : தாய்ப்பாசத்தில் ராக்கி பாயை மிஞ்சிய KGF இயக்குநர் பிரசாந்த் நீல்!

கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள KGF இயக்குநர் பிரசாந்த் நீல், “என் அம்மாதான் கடவுள். எனக்கு அவரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை” எனக் கூறியுள்ளார்.

“என் அம்மாவை விட பெரிய கடவுள் யாரு?” : தாய்ப்பாசத்தில் ராக்கி பாயை மிஞ்சிய KGF இயக்குநர் பிரசாந்த் நீல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடவுள் நம்பிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள KGF இயக்குநர் பிரசாந்த் நீல், “என் அம்மாதான் கடவுள். எனக்கு அவரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை” எனப் பதில் அளித்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே‘கே.ஜி.எஃப் -2’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவான ‘கே.ஜி.எஃப் 2’ முதல் பாகத்தைப் போலவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் புருவம் உயர்த்திய ‘கே.ஜி.எஃப்’ படங்களை இயக்கியவர் பிரசாந்த் நீல். 2014ஆம் ஆண்டு கன்னடத்திரையுலத்திற்கு ‘உக்ராம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரசாந்த் நீல்.

அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்திருப்பதன் மூலம் இந்தியாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் பிரசாந்த் நீல்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கடவுள் நம்பிக்கை குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள பிரசாந்த் நீல், “என் அம்மாதான் கடவுள். எனக்கு அவரை விட பெரிய கடவுள் யாரும் இல்லை” எனப் பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'KGF’ படத்தில் வரும் ராக்கி பாய் போலவே அம்மா சென்டிமென்ட் கொண்டவர் என ரசிகர்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories