சினிமா

கேன்ஸ் திரைப்பட விழா, நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை... ‘த்ரிஷ்யம் 2’ இந்தி ரீமேக்கில் தபு! #Cinema

75வது கேன்ஸ் திரைப்பட விழாவின் நடுவர்களில் ஒருவராக இந்திய நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழா, நடுவர் குழுவில் பாலிவுட் நடிகை... ‘த்ரிஷ்யம் 2’ இந்தி ரீமேக்கில் தபு! #Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ராஜ்குமாரின் குடும்பத்திலிருந்து இன்னொரு ஹீரோ!

2014லில் இருந்து கன்னட சினிமாவில் பல படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் `ஹோம்பாலே ஃபிலிம்ஸ்'. கே.ஜி.எஃப் இரு பாகங்களும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியதுதான். அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரஷாந்த் நீல் நடிக்கும் `சலார்' திரைப்படத்தை தெலுங்கு - கன்னடம் என இரு மொழிகளில் தயாரிக்கிறது. தற்போது இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் பேரனான யுவ ராஜ்குமாரின் அறிமுகப்படத்தை தயாரிக்கிறது ஹோம்பாலே. ராஜ்குமாரின் இரண்டாவது மகன் ராகவேந்திரா ராஜ்குமார். அவரின் மகன் தான் இந்த யுவ ராஜ்குமார். இந்தப் படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்குகிறார்.

75வது கேன்ஸ் திரைப்பட விழா, நடுவர் குழுவில் தீபிகா படுகோன்!

உலகின் முக்கியமான திரைவிழாக்களில் ஒன்று ஃப்ரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா. 75வது கேன்ஸ் திரைப்பட விழா மே 17 முதல் 28 வரை நடைபெற உள்ளது. இதே விழாவில் நடிகர் கமல்ஹாசனின் `விக்ரம்' பட டிரெய்லர் வெளியிடப்படுவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விழாவின் நடுவர்களில் ஒருவராக இந்திய நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஃப்ரெஞ்சு நடிகர் வின்சென்ட் தலைமை தாங்கும் இந்தக் நடுவர் குழுவில், இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாடி, நடிகை நூமி, இயக்குநர் ஜெஃப் நிக்கோலஸ் உட்பட எட்டு நடுவர்கள் உள்ளனர். இதில் ஒருவராக தீபிகா படுகோன் இடம்பெறுகிறார்.

`த்ரிஷ்யம் 2' இந்தி ரீமேக் படப்பிடிப்பில் தபு!

மலையாளத்தில் ஜீத்து ஜோசஃப் இயக்கி மோகன்லால் நடித்து வெளியான படம் `த்ரிஷ்யம்'. இது மிகப்பெரிய ஹிட்டான காரணத்தால் தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தொடர்ந்து த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் ஜீத்து ஜோசப் - மோகன் லால் கூட்டணியில் உருவாகி, நேரடியாக அமேஸான் ப்ரைமில் வெளியானது.

இதுவும் மிகப்பெரிய வெற்றியடைய, உடனடியாக கன்னடத்திலும், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது த்ரிஷ்யம் 2 இந்தியில் ரீமேக் ஆகிவருகிறது. முதல் பாகத்தைப் போலவே அஜய் தேவ்கன், ஷ்ரேயா நடித்து வருகிறார்கள். தற்போது இதன் படப்பிடிப்பில் தபுவும் கலந்து கொண்டிருக்கிறார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் தபு.

உருவாகிறது `தி பேட்மேன்' இரண்டாம் பாகம்!

மேட் ரீவ்ஸ் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் `தி பேட்மேன்'. ராபர்ட் பேட்டின்சன் இந்தப் படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்திலும், ஸோயி - கேட்வுமன் கதாபாத்திரத்திலும், பால் டேனோ - ரிட்லர் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். ஒரு சூப்பர் ஹீரோ படத்தையே துப்பறியும் கதையின் சுவாரஸ்யத்தோடு உருவாக்கியிருந்தார் இயக்குநர். கூடவே இதன் இரண்டாம் பாகத்துக்கான எதிர்பார்ப்பும் அதிகம் எழுந்தது. தற்போது இந்தப் படத்திற்கான இரண்டாம் பாக வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய மேட் ரீவ்ஸ் தான் இந்த பாகத்தையும் இயக்குகிறார்.

`க்ரேமேன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆண்டனி ரூஸோ, ஜோ ரூஸோ என்ற ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `தி க்ரே மேன்'. மார்க் க்ரேயனி எழுதிய நாவலை மையமாக வைத்து உருவாகிறது இந்தப் படம். இதில் ரேயன் கோஸ்லிங், க்ரிஸ் ஈவன்ஸ், ஆனா டி ஆடம்ஸ் ஆகிய ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் தமிழ் நடிகரான தனுஷ் இணைந்து நடித்திருக்கிறார்.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது. தற்போது அதற்கான வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். அதன்படி ஜூலை 22ஆம் தேதி இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

banner

Related Stories

Related Stories