உலகம்

“16 வயது பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை? - உறவினர்கள், ஹாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி” : காரணம் என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

“16 வயது பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை? - உறவினர்கள், ஹாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி” : காரணம் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்கா தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி மிகவும் புகழ்பெற்ற தொடர் 'Toddlers and Tiaras''. இதில் நடித்த கைலியா போசே என்ற சிறுமி தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து ஈர்த்தார். இந்த தொடர் அவரை அமெரிக்காவின் பல இடங்களில் கொண்டுபோய் சேர்த்தது.

இதையடுத்து தொலைக்காட்சி தொடர்கள், படங்கள் என கைலியா போசேவுக்கு வாய்ப்புகள் குவிந்தது. மேலும் இவர் பிரபலமான கோடீஸ்வரரின் மகள் ஆவார். இவரது பெயரில் மட்டும் 1.5 மில்லியனுக்கு சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது 16 வயதாகும் கைலியா போசேவின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், "அவள் ஒரு திறமையான பெண். அவளுக்கு முன்னால் பிரகாசமான எதிர்காலம் இருந்தபோதும் அவர் அவசரமான முடிவை எடுத்துள்ளார். இந்த சமயத்தில் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து தொந்தரவு செய்ய வேண்டாம்" என தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. இதனால் இவரது மரணத்தில் மர்மம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இளம் நடிகை கைலியா போசே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை யாராவது கொலை செய்துள்ளனரா என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories