உலகம்

4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. பொம்மை கார் வாங்கி கொடுத்து சமாதானம்! #5IN1_WORLD

வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. பொம்மை கார் வாங்கி கொடுத்து சமாதானம்! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) அமெரிக்க பணி அனுமதி ஆணை மேலும் 1.5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு காலவதியான பணி அனுமதி ஆணையை மேலும் 18 மாதங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்க கிரீன் கார்ட் வேண்டி காத்திருப்போருக்கும், H1B Visa வைத்திருப்பவர்களின் மனைவிகள் உள்ளிட்டோருக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காலாவதியான பணி அனுமதி ஆணை தானியங்கியாக 180 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் நிலையில், தற்போது 540 நாட்களுக்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. பொம்மை கார் வாங்கி கொடுத்து சமாதானம்! #5IN1_WORLD

2) குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவித்தொகை!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கூட திண்டாட்டமாகி விட்டது. இந்நிலையில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பணம் வழங்கி உதவ இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ரூபாய் 3,000 முதல் 7,500 வரை பண உதவி வழங்குவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. சுமார் 33 லட்சம் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு மே மாதம் முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் பணம் வழங்கப்படும். வங்கிக் கணக்குகள் மூலம் மட்டுமே பணப் பரிமாற்றம் செய்யப்படும். வங்கிக் கணக்கு இல்லாதோர் உடனடியாக வங்கிக் கணக்கை தொடங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3) வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனை!

வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. தலைநகர் பியோங்யங் அருகே உள்ள சுனன் என்ற நகரில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது ஜப்பான் கடல் நோக்கி சென்றதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோர காவல்படையும் வடகொரியா "பாலிஸ்டிக் ஏவுகணையை" ஏவியதை உறுதிப்படுத்தியுள்ளது.

4 வயது சிறுவனால் பதறிப்போன போலிஸ்.. பொம்மை கார் வாங்கி கொடுத்து சமாதானம்! #5IN1_WORLD

4) 4-வயது சிறுவனுக்கு பொம்மை வாங்கி கொடுத்த போலிஸார்!

நெதர்லாந்து நாட்டில் நான்கு வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் காரின் சாவியை எடுத்து காரை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த சிறுவன் வீட்டிலிருந்த தன் அம்மாவின் கார் சாவியை எடுத்து யாருக்கும் தெரியாமல் காரை இயக்க முயன்றுள்ளான். அருகே இருந்த பிற கார்களையும் சேதப்படுத்தியுள்ளான். அப்போது காரின் ஆக்ஸ்லெட்டரை வேகமாக அழுத்தி காரை இயக்கியபோது கார் கட்டுப்பாடின்றிச் சென்று அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மோதியுள்ளது. இதை பார்த்தவர்கள் போலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அங்கு வந்த போலீசார் கார்களை அப்புறப்படுத்தி அந்த சிறுவனைக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவன் பெற்றோர் வரும்வரை சிறுவன் அழாமல் இருக்க சாக்லேட், பொம்மைகள் வாங்கி கொடுத்துள்ளனர்.

5) செய்தியாளருக்கு அச்சுறுத்தல் - 5-வது இடத்தில் பாகிஸ்தான்!

உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாகிஸ்தான் செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச செய்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆய்வறிக்கையின்படி செய்தியாளர்களுக்கு அநீதி இழைப்பதில் பாகிஸ்தான் 5-வது இடத்தில் உள்ளது. கடந்த 1990முதல் 2020-ம் ஆண்டு வரை பாகிஸ்தானில் 138 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உண்மையை எடுத்துரைக்கும் செய்தியாளர்கள் தாக்கப்படுகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொலை செய்யப்படுகின்றனர். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் ஊடக துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. செய்தியாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். பாகிஸ்தானில் பதவியேற்றிருக்கும் புதிய அரசு பத்திரிகை சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories