உலகம்

சவப்பெட்டியில் இருந்து திடீரென கண் விழித்த பெண்.. காங்கோவை மீண்டும் மிரட்டும் எபோலா! #5IN1_WORLD

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தொற்று பரவி வருகிறது.

சவப்பெட்டியில் இருந்து திடீரென கண் விழித்த பெண்.. காங்கோவை மீண்டும் மிரட்டும் எபோலா!  #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1) காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ்!

காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இதுவரை அந்நாட்டில் 13 முறை கண்டறியப்பட்டு உள்ளது. இதில் கடந்த 2018-2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரவிலின் போது அதிகபட்சமாக 2,300 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் காங்கோ நாட்டில் வரமேற்கு பகுதியில் தற்போது மீண்டும் எபோலோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என தேசிய உயிரி மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து காங்கோவின் அண்டை நாடான தான்சானியாவின் சுகாதார அதிகாரிகள் அதிக கண்காணிப்புடன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சவப்பெட்டியில் இருந்து திடீரென கண் விழித்த பெண்.. காங்கோவை மீண்டும் மிரட்டும் எபோலா!  #5IN1_WORLD

2) சனி கிரகம் அருகே இன்னொரு பூமி!

சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகமானது 82 நிலவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியை போலவே தோற்றம் அளிக்கிறது. இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள். ஏனென்றால் இந்த டைட்டனில் ஆறு, குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையும் இந்த டைட்டனில் இருக்கிறது. பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டைட்டனில் இருப்பதால் இதை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

3) மீண்டும் திருமணம் செய்ய பில் கேட்ஸ் விருப்பம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், உலகின் நம்பர்1 பணக்காரருமான பில் கேட்ஸ் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு நான் மெலிண்டாவை விட்டு தனியாக பிரிந்தேன். நான் அப்படி வாழ்க்கையில் மாற்றம் செய்து இருக்கக் கூடாது. நான் செய்ததை தவறாக நினைக்கிறேன். மெலிண்டா மீது நான் இன்னும் பாசத்துடனே இருக்கிறேன். மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்துகொள்ள நான் விரும்புகிறேன். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தை பொறுத்தவரை எனக்கு என்று எந்த திட்டமும் கிடையாது. ஆனால் மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் மட்டும் உள்ளது” என்று கூறியுள்ளார்.

சவப்பெட்டியில் இருந்து திடீரென கண் விழித்த பெண்.. காங்கோவை மீண்டும் மிரட்டும் எபோலா!  #5IN1_WORLD

4) ரஷிய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!

கருங்கடலில் ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இது குறித்து உக்ரைன் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி கூறுகையில் “ஸ்மினி தீவு அருகே கருங்கடலில் ரஷியாவின் ராப்டார் பிரிவு ரோந்து கப்பல்கள் இரண்டை உக்ரைன் வீரர்கள் ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்தனர்” என்றார். கருங்கடலில் ரஷிய கப்பல்கள் டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட வீடியோ ஒன்றை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து ரஷியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

5) சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பெண் திடீரென கண் விழித்ததால் அதிர்ச்சி!

பெரு நாட்டின் லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா. 36 வயதான ரோசா மற்றும் அவரது உறவினருடன் சென்றா கார் விபத்துக்குள்ளானது. அவரது உறவினர்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். ரோசாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் இடத்திற்கு கொண்டுவந்தனர். அவரை அடக்கம் செய்வதற்காக சவப்பெட்டியை திறந்தபோது ரோசா திடீரென கண் விழித்துள்ளார். மேலும், அந்த சவப்பெட்டியை ரோசா உதைத்துள்ளார். சவப்பெட்டியோடு ரோசாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சில மணிநேரத்திற்கு பின் ரோசா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

banner

Related Stories

Related Stories