உலகம்

“இலங்கை மக்கள் விரும்பினால் இதைச் செய்யவும் தயார்” : முன்னாள் பிரதமர் சொன்னது என்ன?

பொதுக்கள் விரும்பினால் காபந்து அரசின் தலைவராக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் திறமை தன்னிடம் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

“இலங்கை மக்கள் விரும்பினால் இதைச் செய்யவும் தயார்” : முன்னாள் பிரதமர் சொன்னது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) பொதுமக்கள் விரும்பினால் பொறுப்பேற்கத் தயார்- முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு

பொதுக்கள் விரும்பினால் காபந்து அரசின் தலைவராக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்கும் திறமை தன்னிடம் இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அனைவரும் பதவி விலக வேண்டும். பொதுமக்கள் விரும்பும் பட்சத்தில் குறுகிய காலத்திற்கு காபந்து அரசுக்கு தலைமை தாங்கத் தயார். ஒன்றரை ஆண்டுகளுக்குள் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

2) லிவிவ் நகர் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் சில இடங்களில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு உக்ரைன் நகரமான லிவிவ் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு குழந்தை உட்பட 11 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நகரின் மேயர் ஆண்ட்ரி சாடோவி தெரிவித்துள்ளார். இதில் 3 ஏவுகணைகள் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகள் மீதும், ஒரு ஏவுகணை டயர் கடை மீது விழுந்து வெடித்தது. அவசரகால மீட்புப் படையினர் இந்த தாக்குதலால் எழுந்துள்ள தீயை அணைத்து வருகின்றனர்.

3) முத்தத்தால் மாட்டிக்கொண்ட பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன்!

மெக்சிகோவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குயின் பெர்டுகோ. இவர் சுமார் 200 நாடுகளுக்கும் மேல் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக உள்ளார். 196 நாடுகளில் அவரை கைது செய்ய இன்டர்போலால் ரெட் வாரண்ட் பிறபிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெர்டுகோ தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் பெர்டுகோவின் கொலம்பிய காதலி அவர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்ததால் கைது செய்யப்பட்டார். புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிறுவனம் கொலம்பிய அதிகாரிகளை எச்சரித்தது, இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். போதைபொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் பெர்டுகோ இப்போது அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவார்.

“இலங்கை மக்கள் விரும்பினால் இதைச் செய்யவும் தயார்” : முன்னாள் பிரதமர் சொன்னது என்ன?

4) சர்வாதிகார நாடுகள் அச்சுறுத்தும்போது நண்பர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் - இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சர்வாதிகார நாடுகளின் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்துள்ளார். இங்கிலாந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இந்தியா, இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள நீண்டகால கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த வாரம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன். சர்வாதிகார நாடுகளிடமிருந்து அமைதி மற்றும் செழுமைக்கான அச்சுறுத்தல்களை நாம் சந்திக்கும் போது, ஜனநாயக நாடுகளும் நண்பர்களும் ஒன்றிணைவது இன்றியமையாதது" என்று தெரிவித்துள்ளார்.

5) அமெரிக்க உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ்

உலகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தங்களின் சொந்த ஆராய்ச்சிக்காகவும், வணிக ரீதியிலும் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் ஒன்றை பால்கன் 9 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி தளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.13 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலைநிறுத்தியதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories