உலகம்

இலங்கையில் பெட்ரோல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.. பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து - 35 பேர் பலி! #5IN1_WORLD

இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் பெட்ரோல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.. பள்ளத்தில்  கவிழ்ந்த பேருந்து - 35 பேர் பலி! #5IN1_WORLD
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி!

ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ள சிமானிமானி கிராமத்தில் நேற்று இரவு பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 35 பேர் பலியாகினர். மேலும் 71 பேர் காயமடைந்தனர். விசாரணையில் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. ஜிம்பாப்வேயில் சமீபத்திய ஆண்டுகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, ஆனால் அதற்கான சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என்று ஐநா அறிக்கைகள் தெரிவிக்கின்றன

இலங்கையில் பெட்ரோல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.. பள்ளத்தில்  கவிழ்ந்த பேருந்து - 35 பேர் பலி! #5IN1_WORLD

2) இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்!

இலங்கையில் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வாங்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. இதை கருத்தில்கொண்டு, சிலோன் பெட்ரோலியம் கழகம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனங்கள் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ஒருதடவை வரும்போது ரூ.1,000 வரை எரிபொருள் வாங்கலாம். ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகனங்கள், ரூ.1,500 வரை எரிபொருள் வாங்கிக் கொள்ளலாம். கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்கள் ரூ.5 ஆயிரம் வரை வாங்கலாம். பஸ், லாரி மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த உச்சவரம்பு நேற்று அமலுக்கு வந்தது.

இலங்கையில் பெட்ரோல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.. பள்ளத்தில்  கவிழ்ந்த பேருந்து - 35 பேர் பலி! #5IN1_WORLD

3) காட்டுத்தீயில் சிக்கி 200 வீடுகள் எரிந்து நாசம்!

அமெரிக்காவின் ருயிடோசோ கிராமத்தில் கடந்த செவ்வாய்கிழமை முதல் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்த காட்டுத்தீ ருயிடோசோவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை களேபரம் செய்து வருகிறது. காட்டுத்தீயில் சிக்கி 200-க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சாம்பலாகின. அதில் ஒரு வீட்டில் இருந்த கணவன்-மனைவி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

4) தென்கொரியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு!

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 1¼ லட்சமாக குறைந்துள்ளது. தென்கொரியாவில் ஒமைக்ரான் தாக்கத்தின் எதிரொலியால் கடந்த 2 மாதங்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. கடந்த மாத மத்தியில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, நாட்டில் அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது

இலங்கையில் பெட்ரோல் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்.. பள்ளத்தில்  கவிழ்ந்த பேருந்து - 35 பேர் பலி! #5IN1_WORLD

5. சாக்லேட் வாங்க இந்தியாவிற்கு வந்த வங்கதேச சிறுவன்!

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச சிறுவன் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். எமன் ஹொசைன் என்ற சிறுவன் ஷால்டா நதிக்கு அருகில் உள்ள வங்காளதேச கிராமத்தில் வசித்து வந்துள்ளான். இந்தியாவின் கலம்சௌரா கிராமத்தில் உள்ள கடை ஒன்றில் இந்திய சாக்லேட் ஒன்றை வாங்குவதற்காக எல்லைப்பகுதியில் முள்வேலியில் உள்ள துளை வழியாக பதுங்கிச் சென்று அதே வழியில் வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்த அந்த சிறுவன் இந்தமுறை பிடிபட்டான். சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் அவனிடம் நூறு வங்காளதேச ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

banner

Related Stories

Related Stories