உலகம்

"கணவரை கொலை செய்வது எப்படி?" என புத்தகம் எழுதியவர் கணவரை கொன்ற வழக்கில் கைது - அமெரிக்காவில் அதிர்ச்சி!

"கணவரை கொலை செய்வது எப்படி?" என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தனது கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"கணவரை கொலை செய்வது எப்படி?" என புத்தகம் எழுதியவர் கணவரை கொன்ற வழக்கில் கைது - அமெரிக்காவில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"HOW TO MURDER YOUR HUSBAND?" என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தனது கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் நான்சி கிராம்டன் போர்ப்பி (71). இவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு எழுதிய புத்தகம் "HOW TO MURDER YOUR HUSBAND?". இந்தப் புத்தகம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நான்சி கிராம்டன் போர்ப்பியின் கணவர் பெயர் டேனியல் போர்ப்பி. இவர் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். கல்லூரிகளில் சமையல் படிப்பு சொல்லித்தரும் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு டேனியல் பணியாற்றும் கல்லூரியில் உள்ள கிச்சனில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலிஸார் கொலையாளி யார் என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், அவரது மனைவி நான்சியின் வாகனம் கொலைக்கு முன்பும் பின்பும் அந்த கல்லூரிக்கு வந்தது சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவி நான்சியே தன் கணவரை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டேனியல் இருக்கும்போதே தன்னுடைய நாவலுக்கான ஆய்வு எனச் சொல்லி துப்பாக்கி ஒன்றையும் அதற்கான கிட்டையும் வாங்கியுள்ளார் நான்சி. இதனால் அவரே தனது கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.

டேனியல் இறப்பதற்கு முன்பு அவரது பெயரில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் இன்சூரன்ஸ் செய்திருந்ததாகவும், அந்த பணத்திற்காக இந்த கொலை நடத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

"கணவரை கொலை செய்வது எப்படி?" என் புத்தகம் எழுதிய பெண் கணவரை கொன்ற வழக்கில் கைதாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories