உலகம்

6 லட்சம் பேர் வேலை செய்யும் நிறுவனத்தின் CEO-வாக இந்தியர்... யார் இந்த ராஜ் சுப்பிரமணியம்?

FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

6 லட்சம் பேர் வேலை செய்யும் நிறுவனத்தின் CEO-வாக இந்தியர்... யார் இந்த ராஜ் சுப்பிரமணியம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகம் முழுவதும் பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் பிரபல FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

FedEx நிறுவனர் பெரட்ரிக் ஸ்மித் 1971இல் FedEx நிறுவனத்தைத் தொடங்கினார். FedEx நிறுவனம் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் மெம்பிஸ்-ஐ தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் கொரியர், இ-காமர்ஸ் உள்ளிட்ட சேவை துறையில் ஈடுபட்டு வருகிறது.

உலகம் முழுதும் பல விமானங்கள், 1,950 அலுவலகங்கள், 6 லட்சம் ஊழியர்களை கொண்டது இந்நிறுவனம். இந்நிறுவனத்தின் நிகர வருமானம் 5.231 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

பெரட்ரிக் ஸ்மித்தே இந்நிறுவனத்தின் சி.இ.ஓ-வாகவும் இருந்து வருகிறார். இவர் சிஇஓ பதவியில் இருந்து வரும் ஜூன் 1ல் பதவி விலக உள்ளார். இந்தப் பதவியில் ராஜ் சுப்பிரமணியம் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராஜ் சுப்பிரமணியம், மும்பையில் உள்ள ஐஐடியி-யில் இரசாயனப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் இரசாயன பொறியியலில் முதுகலை படிப்பதற்காக 1987இல் அமெரிக்காவிற்குச் சென்றார்.

மேலும், ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் மற்றும் பைனான்ஸ் பிரிவில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். பின்னர், FedEx நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த ராஜ் சுப்பிரமணியன் 31 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வருகிறார்.

ராஜ் சுப்ரமணியத்தின் உழைப்பை பாராட்டும் விதமாக, 1996ஆம் ஆண்டு அவருக்கு தென்கிழக்கு ஆசியாவிற்கான மார்க்கெட்டிங் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

6 லட்சம் பேர் வேலை செய்யும் நிறுவனத்தின் CEO-வாக இந்தியர்... யார் இந்த ராஜ் சுப்பிரமணியம்?

அதனைத் தொடர்ந்து, 2003ஆம் ஆண்டில் கனடாவில் உள்ள FedEx நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் 2006ம் அமெரிக்க நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் தலைமை பொறுப்பிலும் நியமிக்கப்பட்டார்.

ராஜ் சுப்ரமணியம் கடந்த மூன்று ஆண்டுகளாக FedEx Corp-ன் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ ஆகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது FedEx நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய பலர் முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் CEO சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெள்ளா, ட்விட்டர் CEO பரக் அகர்வாலை தொடர்ந்து ராஜ் சுப்ரமணியம் FedEx CEO ஆகியுள்ளார்.

banner

Related Stories

Related Stories