உலகம்

“சேவல் சண்டையின்போது 20 பேர் கொலை” : ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?

மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“சேவல் சண்டையின்போது 20 பேர் கொலை” : ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1) சேவல் சண்டையால் நடந்த விபரீதம்!

மெக்சிகோ நாட்டின் மேற்கு மாநிலமான மைக்கோவாகனில் நடைபெற்ற சேவல் சண்டையின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் வெடித்தது. அப்போது அங்கிருந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் மூன்று பேர் பெண்கள் ஆவர். மெக்சிகோ நாட்டின் பல பகுதிகளில் சேவல் சண்டை சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரகசியமாக அவை நடத்தப்பட்டு வருகின்றன.

2) தகவல் தொடர்பு சேவை முற்றிலும் செயலிழப்பு!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சிக்கி சீர்குலைந்துள்ளன. ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக, உக்ரைனின் தேசிய தொலைத்தொடர்பு நிறுவனமான யுகேஆர் டெலிகாம் கடும் செயலிழப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், உக்ரைன், ரஷியா இடையிலான 2-வது கட்ட அமைதி பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“சேவல் சண்டையின்போது 20 பேர் கொலை” : ‘பகீர்’ சம்பவம் - நடந்தது என்ன?

3) அமெரிக்க பெட்எக்ஸ் நிறுவன சிஇஓ மாற்றம்!

உலகம் முழுவதும் பார்சல் சர்வீஸ் நடத்தி வரும் பிரபல பெட்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் நிறுவனர் பெரட்ரிக் ஸ்மித் ஆவார். இவரே சிஇஓ.,வாகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் சிஇஓ பதவியில் இருந்து வரும் ஜூன் 1ல் பதவி விலக உள்ளார். இந்தப் பதவியில் ராஜ் சுப்பிரமணியன் நியமிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

4) சக்திவாய்ந்த ஆயுதங்களை தயாரிக்கிறது - வட கொரியா

மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம், வாசோங் - 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார். சமீபத்தில், அதிபர் கிம்மின் மேற்பார்வையில், அந்நாட்டின் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான, 'வாசோங் - 17' பரிசோதிக்கப்பட்டது. அமெரிக்ககாவை தகர்க்கும் திறனுடைய இந்த ஏவுகணையை வட கொரியா பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

5) பிம்ஸ்டெக் கூட்டத்தில் கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்த இந்தியா வலியுறுத்தல்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நடைபெற்ற ‘பிம்ஸ்டெக்” கூட்டத்தில் பங்கேற்றார். சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள இந்தியப் பெருங்கடலில் உள்ள இரண்டு முக்கிய அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவுகளை வலுப்படுத்த விரும்புகிறது. கூட்டத்தில் உரையாற்றிய அவர், “நம் நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை, குறிப்பாக இணைப்பு, ஆற்றல் மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை தீவிரப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நம்முடைய அர்ப்பணிப்பு உணர்வை வலியுறுத்துகிறேன்” என்று உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories