உலகம்

பெற்றோரை சுட்டுக்கொன்று 3 நாட்கள் சடலத்துடன் வசித்த சிறுவன்: ஸ்பெயினில் நடந்த கொடூரம்; பின்னணி என்ன?

பெற்றோரையும், சகோதரனையும் சுட்டு வீழ்த்தி அவர்களது சடலத்தோடு 3 நாட்கள் தங்கியிருக்கிறார் ஸ்பெயினைச் சேர்ந்த 15வது சிறுவன்.

பெற்றோரை சுட்டுக்கொன்று 3 நாட்கள் சடலத்துடன் வசித்த சிறுவன்: ஸ்பெயினில் நடந்த கொடூரம்; பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேட்டையாடும் துப்பாக்கியால் தனது தாய், தந்தை, சகோதரனை சுட்டுக் கொன்ற 15 வயது சிறுவனை ஸ்பானிஷ் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை வெளிவந்த தகவல்:

பள்ளி பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தனது மகனை தண்டிக்கும் வகையில் வீட்டில் இணையதள வசதிகளை பயன்படுத்தக் கூடாது என தாய் ஒருவர் கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.

பெற்றோரை சுட்டுக்கொன்று 3 நாட்கள் சடலத்துடன் வசித்த சிறுவன்: ஸ்பெயினில் நடந்த கொடூரம்; பின்னணி என்ன?

இதனால் ஆத்திரமடைந்த அந்த 15 வயது சிறுவன், வீட்டில் இருந்த விலங்குகளை வேட்டையாடும் துப்பாக்கியை எடுத்து தாயையும் அவரது சகோதரனையும் சுட்டிருக்கிறார்.

அந்த சமயம் பார்த்து வந்த தனது தந்தையையும் நெஞ்சிலேயே குறி வைத்து சுட்டிருக்கிறார் அந்த சிறுவன். அதன் பிறகு செய்வதறியாது மூன்று நாட்களாக அவர்களது சடலத்தோடே இருந்திருக்கிறார்.

எதேர்ச்சையாக அண்டைவீட்டைச் சேர்ந்தவர் சிறுவனின் குடும்பத்தார் குறித்து விசாரித்ததும் உண்மை தெரிய வந்திருக்கிறது.

பெற்றோரை சுட்டுக்கொன்று 3 நாட்கள் சடலத்துடன் வசித்த சிறுவன்: ஸ்பெயினில் நடந்த கொடூரம்; பின்னணி என்ன?

அதன் பிறகு போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உயிரிழந்தவர்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டின் அலிகன்டெவில் உள்ள எல்சி (elche) என்ற பகுதியில் கடந்த செவ்வாய் அன்று நடந்திருக்கிறது.

சிறுவனின் செயலால் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் என ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories