தமிழ்நாடு

கரப்பானை கொல்லும் HIT அடித்து செயின் பறிப்பு; கிஃப்ட் வாங்குவதுபோல நடித்த கில்லாடி பெண் சிக்கியது எப்படி?

காதலர் தினத்துக்கு பரிசுப் பொருட்கள் வாங்க வந்தது போல நடித்து ஃபேன்ஸி கடை உரிமையாளரிடம் நகையை பறித்துச் சென்ற சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கரப்பானை கொல்லும் HIT அடித்து செயின் பறிப்பு; கிஃப்ட் வாங்குவதுபோல நடித்த கில்லாடி பெண் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிஃப்ட் பேக்கிங் செய்யும் போது செல்வராணி மீது Hit Spray அடித்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றிருக்கிறார் பெண் ஒருவர். இது தொடர்பான வீடியோ தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியில் உள்ளது செல்வராணி என்ற பெண்மணியின் ஃபேன்ஸி கடை. இந்த கடைக்கு நேற்று முன் தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காதலர் தினத்துக்கு பரிசுப் பொருட்கள் வாங்குவது போல வந்திருக்கிறார்.

அப்போது, வாங்கிய கிஃப்டை செல்வராணி பேக் செய்துக்கொண்டிருந்த போது, அந்த பெண் தான் வைத்திருந்த Hit Spray-ஐ செல்வராணி மீது அடித்து அவர் அணிந்திருந்த 7.5 சவரன் தங்கச்சங்கிலியை பறித்திருக்கிறார்.

அந்த திருட்டு பெண்ணின் செயலால் மயக்கமடையாது அலறிய செல்வராணி, அப்பெண்ணை தப்பித்து விடாமல் தடுக்க முயற்சித்திருக்கிறார். இருப்பினும் அப்பெண் கடையை விட்டு தப்பித்திருக்கிறார்.

பின் தொடர்ந்துச் சென்ற செல்வராணி, அந்த திருட்டு பெண்ணை பொதுமக்கள் உதவியுடன் பிடித்திருக்கிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிதான் தற்போது வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories