தமிழ்நாடு

வாங்கிய Cake-க்கு காசு கேட்ட கடைக்காரரை அடித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் : ‘காப்பு’ மாட்டிய போலிஸ்!

வாங்கிய கேக்-க்கு காசு தராத ஸ்வீட் கடையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போதை கும்பல் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாங்கிய Cake-க்கு காசு கேட்ட கடைக்காரரை அடித்து ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் : ‘காப்பு’ மாட்டிய போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி கடை தெருவில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார் முகமது அலி. வழக்கம் போல முகமது அலி வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, மது போதையில் கடைக்கு ஆட்டோ ஒன்றில் வந்த 4 நபர்கள் அரைக்கிலோ கேக் கேட்டுள்ளனர். கேக்கை கொடுத்த கடை உரிமையாளர், கேக்கிற்கு உரிய பணம் கேட்டுள்ளார். அதற்கு போதை ஆசாமிகள் எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கொச்சை வார்த்தைகளால் கடை உரிமையாளரை மிரட்டி உள்ளனர்.

அதோடு சற்றும் எதிர்ப்பார்க்காத நிலையில், போதையில் இருந்த அந்த கும்பல், கடையில் உள்ள தராசை கீழே போட்டு உடைத்து, கடை உரிமையாளரை அடித்து கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆட்டோவில் இருந்த அரிவாளை எடுத்து தாக்க முயற்சி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கடைக்காரரின் கூச்சலை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடியதை பார்த்த போதை கும்பல் தெறித்து ஓடியுள்ளனர். தொடர்ந்து மூன்று பேர் ஆட்டோவை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிய நிலையில், ஒருவரை பிடித்து பொதுமக்கள் கீழையூர் போலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலிசார் விசாரணையில், பிடிப்பட்ட நபர் காரைநகர் பகுதியை சேர்ந்த சாம்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓசியில் கேக் கேட்டு தராத ஸ்வீட் கடையில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போதை கும்பல் அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories