
அமெரிக்காவின் சிகாகோ நகரத்தை சேர்ந்தவர் டெரைஸ் ஹோல்ட். மூதாட்டியான இவர் தினமும் தனது செல்போனில் 'Wordle' கேம் விளையாடும் பழக்கம் கொண்டனர். வார்த்தையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டின் சாராம்சம்.
இந்த விளையாட்டில் மூதாட்டி பெறும் மதிப்பெண்ணைத் தனது மகளுக்குத் தினமும் அனுப்புவது வழக்கம். இந்நிலையில், மூதாட்டி கடந்த 5ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு நிர்வாணமாக நுழைந்துள்ளார். பின்னர் கத்தியைக் காட்டி கொலை செய்து விடுவதாக மூதாட்டியை மிரட்டியுள்ளார்.
இதையடுத்து தாயிடமிருந்து 'Wordle' விளையாட்டுக்கான ஸ்கோர் மகளுக்கு வரவில்லை. இதற்கு அடுத்தநாளும் வராததால் சந்தேகமடைந்த அவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர் போலிஸார் மூதாட்டி வீட்டிற்குச் சென்றபோது கத்தி முனையில் அவர் பிணையக் கைதியாக இருப்பது தெரிந்தது.
உடனே போலிஸார் மூதாட்டியைச் சிறைபிடித்து வைத்திருந்த வாலிபர் டேவிஸை கைது செய்து அவரை மீட்டனர். பிணைக்கைதியாக இருந்த மீதாட்டியை மீட்க GAME உதவியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.








