சினிமா

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

"Game-அ ஜெயிக்கணும்கற concept-ல, மனிதாபிமானத்த சாவடிச்சிட்டீங்க" என்று பிரவீன் ராஜ், விக்ரமை corner செய்யும் காட்சிகள் இன்றைய promo-வில் இடம்பெற்றுள்ளது.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
S Ramya
Updated on

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. நிகழ்ச்சி 92 நாட்களை கடந்து விட்ட நிலையில் போன வாரம் நடைபெற்ற ticket to finale டாஸ்கில் பாரு, கமருதீன், சுபிக்க்ஷா, அரோரா, வினோத், விக்ரம், திவ்யா, சாண்ட்ரா மற்றும் சபரி என வீட்டில் இருந்த 9 போட்டியாளர்கள் ஒரு குறுகலான காருக்குள் நுழைந்தனர். இதில் சாண்ட்ரா, பாரு, கமரு ஆகியோர் ஒரே இருக்கையில் அமர்ந்து இருந்தனர். அந்த காருக்குள் "யார் இறுதி வரை survive பண்ணுறாங்க" என்பதே டாஸ்க்.

இந்த டாஸ்கில் சாண்ட்ரா, பாரு, கமரு ஆகியோரிடையே காரசார விவாதம் ஆரம்பம் ஆனது. "பிக்பாஸ் எல்லா சீசனையும் பாத்துட்டு தெளிவான திட்டத்தோட வந்துருப்பாங்க" என்று கமரு, சாண்ட்ராவை கூற, "உங்களைத்தான் ஊரே பார்க்குதே... வெளியே போய் பாருங்க புரியும்" என்று பதிலுக்கு சாண்ட்ராவும் கூறினார். இதில், "காமருதீன்" என்று சாண்ட்ரா கமருவை வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்தார். அதற்கு "சாண்ட்ரா.. ஸ்கேம்ட்ரா..." என்று கமருவும் பதிலுக்கு கூற... செருப்பு பிஞ்சிடும்... போடி வாடி என்று வார்த்தைகள் தடிக்க தொடங்கியது.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

இதற்கிடையில் பாருவும், கமருவை மேலும் மேலும் உசுப்பேத்திக்கொண்டிருந்தார். இதில், பாருவும், கமருவும் ஒன்றாக சேர்ந்து சாண்ட்ராவை வார்த்தைகளால் தாக்க, ஒரு கட்டத்திற்கு மேல், காரின் கதவைத் திறந்து சாண்ட்ராவை வெளியே தள்ள தொடங்கினார் பாரு. முடிந்த அளவிற்கு வெளியே சென்று விடாமல் தாக்கு பிடிக்க சாண்ட்ரா முயன்ற போதும் பாரு, கமரு இருவரும் சேர்ந்து அழுத்தம் கொடுத்து தள்ளியதால் காரை விட்டு வெளியே சென்று கீழே விழுந்தார் சாண்ட்ரா. சாண்ட்ரா கத்தி அழுத்தும் சமயத்திலும் அத்துடன் விடாமல் காரின் கதவை முட பாரு மூன்ற பொழுது, சாண்ட்ராவின் கால் பகுதி கார் கதவின் அடிப்பகுதியில் சிக்கி இருந்தது.

அப்பொழுது டாஸ்கில் இருந்து வெளியேறி இருந்த விக்ரம் வேகமாக வந்து சாண்ட்ராவை வெளிநோக்கி இழுத்து காப்பாற்றி இருந்தார். இதற்கு இடையிலேயே கார் உள்ளே இருந்த போட்டியாளர்கள் பாரு, கமருவின் செயல்களை கண்டித்த போதும் அவர்கள் சாண்ட்ராவை விட்டபாடில்லை. சாண்ட்ரா வெளியே தள்ளப்பட்டு அவருக்கு panic attack வந்ததை கண்ட சபரி மற்றும் வினோத் காரை விட்டு வெளியேறி சாண்ட்ராவுக்கு உதவினர். மேலும், தாங்கள் செய்ததது தவறு என்ற குற்ற உணர்ச்சியோ இருவருக்குமே இல்லை என்பதை அடுத்ததடுத்து நடைபெற்ற காட்சிகளில் காண முடிந்தது. இந்த டஸ்கில் இறுதி வரை பங்கேற்ற அரோரா TTF டாஸ்கில் வெற்றி பெற்று direct finalist-ஆக தேர்வாகினார்.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

இதையடுத்து வார இறுதிநாட்களில் போட்டியாளர்களை சந்திக்க வந்த விஜய் சேதுபதி, அனைத்து போட்டியாளர்களிடமும் சாண்ட்ரா, பாரு, கமரு பிரச்சினை குறித்து விசாரித்தார். மேலும் பார்வதி, கமருதீனிடம் அவர்களின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பினார். எனினும் பார்வதி சமாளிக்க முயலவே, இறுதியில் இரண்டு பேருக்குமே red card காண்பிக்கப்பட்டு இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது சுபிக்க்ஷா. தனது சமூகம் பற்றிய விழிப்புணர்வை வெளியுலகில் உரக்க கூறவேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டவர். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து Beatboxing கற்றுக்கொண்டது, சுயமாக பாட்டு எழுதியது, டாஸ்கில் பங்கேற்றகும்போதும் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி பல சமயங்களில் சுபிக்க்ஷா நின்றதைபெரும்பாலும் காண முடிந்தது. மேலும், "ஒருவேளை நீங்கள் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியிருந்தால் அது உங்களின் வெற்றியாக மட்டுமே இருந்திருக்கும்: ஆனால் இப்போது ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக தலைநிமிர்ந்து செல்கிறீர்கள்" என்று கூறி வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ்.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டிற்குள் சபரி, சாண்ட்ரா, அரோரா, விக்ரம் மற்றும் வினோத் ஆகியோர் top 5 போட்டியாளர்களாக இந்த வாரத்தை தொடங்கியுள்ளனர். நாமினேஷனுக்கு அழைப்பதுபோல ஒவ்வொரு போட்டியாளர்களையும் தனித்தனியாக அழைத்து "யாரை save செய்ய நினைக்கறீங்க" என்ற கேள்வியை முன்வைத்தார் பிக்பாஸ். காப்பாற்றப்படும் ஒவ்வொரு நபருக்கும் போட்டியாளர் ஒரு பச்சைமிளகாவை சாப்பிட சாப்பிட வேண்டும் என கூறப்பட்டது. இதில் பெரும்பாலானோர் சபரி மற்றும் சாண்ட்ராவின் பெயரே கூறி இருந்தனர். எனினும் உங்க தியாகத்த பாராட்டுறேன், ஆனா யாரும் காப்பற்றப்படல என்று twist கொடுத்தார் பிக்பாஸ்.

இதையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் வியானாவின் வருகை நிகழ்ந்தது. "இங்க இருந்து ரெண்டு பேரை நான் நைட்டு கூட்டிட்டு போயிடுவேன்; யாரை கூப்டுட்டு போகலாம்னு நீங்களே சொல்லுங்க" என்று தனது task-ஐ ஆரம்பித்தார் வியானா. இதில் முன்வந்து பேசிய விக்ரம், "இதுக்கு மேல ஒருத்தர குறைச்சொல்லி வெளிய அனுப்பி விளையாடுறதுல எனக்கு விருப்போம் இல்லை, பணப்பெட்டிக்காக காத்திருந்தேன், திவ்யாவை அழ வெச்சிருக்கேன், அதுனால என்னையவே வெளியில கூப்டுட்டு போய்ட்டு" என்று கூறினார். எனினும் "வக்ரம் - விக்ரம், fraud, விஷ கிருமி" போன்ற வார்த்தைகள் விக்ரமிற்கு பொருந்தும் என்று வியான கூறினார். வீட்டிற்குள் மீண்டும் வந்த வியானாவுக்கு, விக்ரம் மீது மிகுத்த கோபம் இருப்பதை அவரது சொர்களின் வழியே காண முடிந்தது.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

இதையடுத்து, பண பேட்டி 2.0 டாஸ்க் தொடங்கியது. இந்த முறை டாஸ்க் விளையாடுவதின் மூலம் பணத்தை பெட்டிக்குள் போட்டியாளர்களே சேர்ப்பது போன்று வடிவமைத்து வழங்கப்பட்டுள்ளது. கார்டன் ஏரியாவில் கார் ஒன்று வைக்கப்பட்டு அதில் பல இடங்களில் பணம் ஒழித்து வைக்கப்பட்டிருந்தது. மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த டாஸ்கில் 1,45,000 பணத்தை சேர்த்து இருந்தனர். காரின் முலை முடுக்கெல்லாம் தேடிய போட்டியாளர்கள் மண்ட மேல இருக்குற கொண்டையை மறந்துட்டேன் என்ற கதையாக ஏராளமான பணகளல நிரப்பட்டிருந்த காரின் மேல் பகுதியை இறுதிவரை கவனிக்க மறந்தே விட்டனர்.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

இதையடுத்து, வியானவை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் watermelon star திவாகர், பிரவீன் காந்தி, பிரவீன் ராஜ் ஆகியோர் வந்துள்ளனர். இதில் வெளியுலகம் பற்றி போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட watermelon star திவாகரை "main door திறந்து வெளியே அனுப்பிடுவேன்" என்று பிக்பாஸ் warning செய்யும் காட்சிகள் இன்றை promoவில் இடம்பெற்றுள்ளது. மேலும் வெளியே இருந்த வந்த போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் நபர்களை மனதளவில் பலவீனம் செய்யும் காட்சிகளையும், இதனால் வீட்டிற்குள் சண்டை வரும் காட்சிகளையும் காண முடிகிறது.

100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!

குறிப்பாக முன்னரே விக்ரமை வார்த்தைகளால் வியானா பலவீன படுத்தியதை தொடர்ந்து, game-அ ஜெயிக்கணும்கற concept-ல நீங்க போறதுனால, உங்களுக்கு நீங்க உண்மையா இல்லை அண்ணா; உங்களுக்குள்ள இருந்த அந்த மனிதாபிமானத்த சாவடிச்சிட்டீங்க" என்று பிரவீன் ராஜும் விக்ரமை corner செய்யும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories