உலகம்

“கண்டுபிடித்த 10 வாரங்களில் 9 கோடி பாதிப்பு.. ஒமைக்ரானை குறைத்து மதிப்பிடக்கூடாது”: பீதியை கிளப்பும் WHO!

10 வாரங்களுக்கு முன்புதான் ஒமைக்ரான் வேரியன்ட்டின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பின் செயலாளர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.

“கண்டுபிடித்த 10 வாரங்களில் 9 கோடி பாதிப்பு.. ஒமைக்ரானை குறைத்து மதிப்பிடக்கூடாது”: பீதியை கிளப்பும் WHO!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 381,675,279 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 57.02 லட்சத்தை தாண்டியது. அதேவேளையில், தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்து உருமாற்றமடைந்த பாதிப்பு அதிகமான வேளையிலும் இந்தியா உட்பட பல நாடுகள் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளன.

இதனால் நோய்த் தொற்றின் பாதிப்பு மேலும் மேலும் அதிகரிக்கும் என்ற தீவிரத் தன்மையை உலக நாடுகள் உணரவேண்டும் உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் உருமாற்றமடைந்த ஒமைக்ரானை குறைத்து மதிப்பிடக்கூடாது என உலக சுகாதார அமைப்பின் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் செயலாளர் டெட்ரோஸ் அதானம் கூறுகையில், “குறைந்த பாதிப்புகளைக் கொடுப்பதால் ஒமைக்ரானை வேரியன்ட்டை குறைத்து மதிப்பிடக்கூடாது.

பல நாடுகளில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. 10 வாரங்களுக்கு முன்புதான் ஒமைக்ரான் வேரியன்ட்டின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை கிட்டத்தட்ட 90 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில், தடுப்பூசி வந்துவிட்டதால், வைரஸ் பரவுவதை தவிர்க்கவேண்டிய அவசியமில்லை என சில நாடுகள் நினைப்பது கவலையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories