உலகம்

2ம் உலகப்போரில் தொலைந்த விமானம் : 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் கண்டுபிடிப்பு - 13 பேரின் நிலை என்ன?

இரண்டாம் உலகப்போரில் போது காணமல் போம் போர் விமானம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

2ம் உலகப்போரில் தொலைந்த விமானம் : 77 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலையில் கண்டுபிடிப்பு - 13 பேரின் நிலை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்காவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தொலைந்துப் போனதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இந்தியா, சீனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் விழுந்து அதிகளவில் காணாமல் போனது.

அந்தவகையில், சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945ம் ஆண்டு 13 பேருடன் சென்ற சி-46 ரக அமெரிக்க விமானம், புறப்பட்ட சில மணி நேரங்களில் ரேடாருடனான தனது தொடர்பை இழந்து மாயமானது. மோசமான வானிலைக் காரணமாக மாயமான விமானம் எங்கு போனது என்பது யாருக்கும் தெரியாமலேயே போனது. அமெரிக்கா ராணுவமும் தேடும் பணியை நிறுத்தியது. அதேவேளையில் இந்தியாவின் அருணாச்சல பிரதேச இமயமலை பகுதியில் விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது.

அப்படி கூறப்பட்ட கருத்து உண்மையாகும் வகையில், சி-46 ரக அமெரிக்க விமானம் இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1945ம் ஆண்டு மாயமான விமானத்தில் பயணித்த ஒருவருவரின் மகன், தந்தையின் விமானத்தைக் கண்டறியும் முயற்சியில் இறங்கினார்.

அந்த நபர் தான் நியார்க் நகரைச் சேர்ந்த பில் ஸ்கேர். அவர் விமான தேடுதல் பணியை அமெரிகாவைச் சேர்ந்த மலையேற்ற சாகச வீரர் கிளேட்டன் குக்லெஸ் என்பவரின் ஒப்படைத்தார். அதன்படி, தனது குழுவினருடன் குக்லெஸ் இந்தியாவின் இமயமலை பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கின.

இந்திய நாட்டைச் சேர்ந்த உள்ளூர் வழிகாட்டிகள் குழுவும் இனைந்து இந்த தேடிதல் பணியில் முகாமிட்டு தேடி வந்த நிலையில், போர் விமானத்தின் உடைந்த பாகம் ஒன்றை இந்தக் குழு கண்டுபித்துள்ளது. பெரிய பனிப்பாறைகளுக்கு நடுவே பனி மூடிய நிலையில், விமான வால்பகுதியில் இருந்த குறியீட்டு எண்ணைக் கொண்டு அடையாளம் காண்டுப்பிடித்தனர். விமானம் காணாமல் போய் 77 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories