உலகம்

125 பாம்புகளுக்கு மத்தியில் சடலமாக கிடந்த நபர்.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

அமெரிக்காவில் உயிரிழந்தவர் வீட்டிலிருந்து சட்டவிரோதமாக இருந்த 125 பாம்புகளை போலிஸார் மீட்டுள்ளனர்.

125 பாம்புகளுக்கு மத்தியில் சடலமாக கிடந்த நபர்.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் மேரிலாந்தில் சார்லஸ் கவுண்டி என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீடு பூட்டியே இருந்துள்ளது. இதனால், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அவரது வீட்டின் அருகே சென்று பார்த்தபோது அந்த நபர் தரையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலிஸார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது 125 பாம்புகளுக்கு மத்தியில் அந்த நபர் சடலமாக இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அனைத்து பாம்புகளையும் போலிஸார் மீட்டனர். இதையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

125 பாம்புகளுக்கு மத்தியில் சடலமாக கிடந்த நபர்.. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

அந்த நபர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான எந்த தடையமும் போலிஸாருக்கு கிடைக்கவில்லை. இதனால் அவர் பாம்பு கடித்து உயிரிழந்திருக்கலாம் என போலிஸார் கருதுகின்றனர். அவரின் பிரேதப் பரிசோதனை கிடைத்த பிறகே அது உறுதியாகும் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர் வீட்டிலிருந்து 125 கொடிய விஷமுடிய பாம்புகள் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories