உலகம்

Shift Time முடிஞ்சு போச்சு: பாதி வழியிலேயே விமானத்தை இறக்கிய விமானி.. பீதியடைந்த பயணிகள்- எங்கு தெரியுமா?

வேலை நேரம் முடிந்து விட்டதாகக் கூறி பாதி வழியிலேயே விமானத்தை விமான இறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shift Time முடிஞ்சு போச்சு: பாதி வழியிலேயே விமானத்தை இறக்கிய விமானி.. பீதியடைந்த பயணிகள்- எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று ரயாத் நகரில் இருந்து இஸ்லாமாபாத்துக்குப் பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. பின்னர் மோசமான வானிலை காரணமாக விமானம் திடீரென சவுதி அரேபியாவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து வானிலை சரியானதை அடுத்து மீண்டும் விமானம் இஸ்லாமபாத்துக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது 'தனது ஷிஃட் நேரம் முடிந்து விட்டது' என கூறி விமானத்தை இயக்க மறுத்து விமான சென்றதுபயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு விமான நிலைய அதிகாரிகள் அவர்களை தற்காலிகமாக உணவு விடுதியில் தங்கவைத்துள்ளனர். இதையடுத்து மாற்று விமானி வந்தபின்னரே மீண்டும் பயணிகளுடன் அந்த விமான இஸ்லாமாபாத்துக்கு செல்லும் என விமான நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories