உலகம்

”இதுக்கு திறமை, படிப்பு என எந்த வரம்பும் இல்லை” - லண்டன் Queuer-ன் வாய்ப்பிளக்க வைக்கும் ஒருநாள் சம்பளம்!

வரிசையில் நிற்பதையே பணியாகக் கொண்டு லண்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.

”இதுக்கு திறமை, படிப்பு என எந்த வரம்பும் இல்லை” - லண்டன் Queuer-ன் வாய்ப்பிளக்க வைக்கும் ஒருநாள் சம்பளம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஃப்ரெட்டி பெக்கிட் என்ற லண்டனைச் சேர்ந்த வரலாற்று கதாசிரியர்தான் கடந்த 3 ஆண்டுகளாகவே வரிசையில் நிற்கும் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறது.

ஃபுல்ஹாம் பகுதியைச் சேர்ந்த ஃப்ரெட்டி இது தொடர்பாக The Sun என்ற பிரபல ஆங்கில செய்தி தளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தன்னுடைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலானோர் வயதானவர்கள், கைக்குழந்தைகளை கொண்டவர்கள், வீட்டு பராமரிப்பு பணிகளில் நித்தமும் ஈடுபடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். சில பணக்காரர்களும் இருக்கிறார்கள்.

இவர்களால் வெகுநேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் உள்ளிட்ட பலன்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆகவே அவர்களுக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் வரிசையில் நின்று அதனைப் பெற்று அவர்களிடம் ஒப்படைப்பதே என்னுடைய வேலையாக உள்ளது.

”இதுக்கு திறமை, படிப்பு என எந்த வரம்பும் இல்லை” - லண்டன் Queuer-ன் வாய்ப்பிளக்க வைக்கும் ஒருநாள் சம்பளம்!

குறிப்பாக கிறிஸ்துமஸின் போது ஷாப்பிங் செய்வதற்காகவும், இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் வாங்கவும் 3 முதல் 8 மணிநேரம் வரிசையில் நின்றிருக்கிறேன்.

இந்த வேலைக்காக எந்த படிப்பும், தகுதியும், திறமையும் தேவையில்லை. ஒரு மணிநேரத்துக்கு 20 பவுண்ட் சம்பாதிக்கிறேன். நினைக்கும் நேரத்தில் எனக்கு தோன்றும் நாளில் பணியாற்றுவேன்.

என்னுடைய நண்பர்கள், உறவினர்களுக்கு நான் செய்யும் வேலை காமெடியாக இருந்தாலும் என்னுடைய சம்பளம் அவர்களை மிகவும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

ஃப்ரெட்டி பெக்கிட் நாளொன்றுக்கு 160 பவுண்ட் அதாவது இந்திய மதிப்பில் 16 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். இவர் தன்னை professional queuer என்றே பெருமையாகவும் கூறிக் கொள்கிறார்.

banner

Related Stories

Related Stories