இந்தியா

பிறந்தநாள் பரிசா இததான் கொடுப்பாங்களா? கொதித்து போன டீச்சர்; வீட்டு ஓனரை இறுக்கும் பெங்களூர் போலிஸ்!

பிறந்த நாள் பரிசாக உள்ளாடையை அனுப்பி பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக வீட்டின் உரிமையாளர் மீது பெங்களூரு ஆசிரியரை போலிஸில் புகாரளித்துள்ளார்.

பிறந்தநாள் பரிசா இததான் கொடுப்பாங்களா? கொதித்து போன டீச்சர்; வீட்டு ஓனரை இறுக்கும் பெங்களூர் போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

42 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர் மீது போலிஸில் பாலியல் புகாரளித்துள்ளார்.

தெற்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீநகர் பகுதியில் வசித்து வருபவர் பத்மநாபா. இவரது குடியிருப்பில் கடந்த 12 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியை ஒருவர் வசித்து வருகிறார்.

அண்மையில் அந்த ஆசிரியையின் பிறந்த நாளுக்கு பத்மநாபா பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அதை பிரித்து பார்த்த போது உள்ளாடை இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றுக்கிறார்.

மேலும் ஆசிரியைக்கு கால் செய்த பத்மநாபா தன் முன் அந்த உள்ளாடை அணிந்து வரும்படி கூறியிருக்கிறார். அதுபோக அவ்வப்போது பாலியல் ரீதியாகவும் தொந்தரவு செய்திருக்கிறார்.

நேரில் அழைத்து எச்சரிக்கை விடுத்த பிறகும் பத்மநாபா இதே செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்படி இருக்கையில் ஒரு நாள் வீட்டில் உள்ளே ஆசிரியை தூங்கிக் கொண்டிருக்கும் போது வெளிப்புறமாக தாழிட்டு பூட்டியிருக்கிறார்.

இப்படியாக பத்மநாபாவால் தொடர் தொந்தரவுக்கு ஆளான நிலையில் ஹனுமந்த்நகர் போலிஸாரிடம் புகார் கூறியிருக்கிறார். இதனையடுத்து பத்மநாபா மீது 441, 504, 354ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பதிலளித்துள்ள பத்மநாபா வீட்டை காலி செய்யச் சொன்னதால் தன் மீது தவறான புகாரை ஆசிரியை பதிவு செய்திருக்கிறார் எனக் கூறியுள்ளார். விசாரணையில் வீட்டை காலி செய்வதில் இரு தரப்புக்கும் தகராறு இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.

ஆனால் பாலியல் புகார் குறித்து ஆதாரம் சிக்கினால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஹனுமந்த்நகர் போலிஸார் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories