தமிழ்நாடு

கொஞ்சம் என்னை அறிந்தால்; கொஞ்சம் ஆதவன்; தேவைக்கேற்ப சென்டிமென்ட்-கடத்தல் நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?

குறும்படம் எடுக்க பணம் தேவைப்பட்டதால் தந்தையை மிரட்டி இளைஞர் கடத்தல் நாடமாடிய சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

கொஞ்சம் என்னை அறிந்தால்; கொஞ்சம் ஆதவன்; தேவைக்கேற்ப சென்டிமென்ட்-கடத்தல் நாடகமாடிய மகன் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பென்சிலய்யா (54) என்பவரின் இளைய மகன் கிருஷ்ணபிரசாத் (24). B.A. பொருளாதாரம் படித்துள்ள கிருஷ்ணபிரசாத் குறும்படம் (Short Film) எடுப்பதாகச் சொல்லி நண்பர்கள் தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி அதில் சுகபோகமாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

தற்போது கடன் கையை கடிக்கத் தொடங்கியதால் நண்பர்களுடன் திட்டம் போது பெற்ற தந்தையிடம் சிறப்பான கடத்தல் நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் கிருஷ்ணபிரசாத்.

அதன்படி, கடந்த ஜனவரி 13ம் தேதி காலை வடபழனியில் உள்ள வணிக வளாகத்துக்கு வீட்டில் இருந்து உறவினர் மகனுடன் வாடகை காரில் சென்றிருக்கிறார். மாலுக்கு வந்ததும் ஏவிஎம் ஸ்டுடியோ வரை சென்றுவிட்டு வருகிறேன் என உறவினர் மகனிடம் கூறி காரிலேயே இருக்க வைத்து அங்கிருந்து கிருஷ்ணபிரசாத் சென்றிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து காரில் இருந்த உறவினர் மகனுக்கு ஃபோன் செய்து, தன்னை 4 பேர் கடித்திச் செல்வதாகவும் இதனை வீட்டில் தெரிவிக்கும்படியும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருக்கிறார்.

இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து தெலங்கானாவில் உள்ள செகந்திராபாத்துக்கு சென்றிருக்கிறார். அங்கு ரூம் எடுத்து தங்கியதோடு பெற்றோருக்கு ஃபோன் செய்து மிரட்டல் நாடகத்தை கச்சிதமாக அரங்கேற்றியுள்ளார் கிருஷ்ணபிரசாத்.

அதன்படி, 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே தன்னை உயிரோடு விடுவதாவக கடத்தல்காரர்கள் மிரட்டுவதாகச் சொல்லி அழுதிருக்கிறார். அப்படி பணம் கொடுக்காவிட்டால் உடல் உறுப்புகளை விற்றுவிடுவோம் எனவும் மிரட்டுவதாகச் சொல்லி பென்சிலைய்யாவை கதிகலங்கச் செய்திருக்கிறார் கிருஷ்ணபிரசாத்.

இதனையடுத்து வடபழனி காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க பென்சில்லய்யா புகாரளித்திருக்கிறார். சைபர் க்ரைம் போலிஸாரின் உதவியுடன் கிருஷ்ணபிரசாத்தின் செல்போன் எண்ணை உடனடியாக ட்ரேஸ் செய்தனர். அதில் அவர் செகந்திராபாத்தில் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து கண்காணித்ததில் செகந்திராபாத்தில் உள்ள பொதுவெளியில் ஜாலியாக கிருஷ்ணபிரசாத் சுற்றித் திரிந்தது தெரிய வந்ததை அடுத்து அப்பகுதி போலிஸாரால் பிடிபட்டிருக்கிறார்.

பின்னர் சென்னை அழைத்து வந்ததும் வடபழனி போலிஸார் தீவிர விசாரணை நடத்தி கிருஷ்ணபிரசாத்தை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories