உலகம்

"ஒமைக்ரானை எதிர்கொள்ள இது மட்டுமே ஒரே வழி" : சௌமியா சுவாமிநாதன் கூறுவது என்ன?

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளதாக சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

"ஒமைக்ரானை எதிர்கொள்ள இது மட்டுமே ஒரே வழி" : சௌமியா சுவாமிநாதன் கூறுவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று 106 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த புதிய தொற்றால் உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உலகம் முழுவதும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு போன்ற தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒமைக்ரான் தொற்று அபாய கட்டத்தை எட்டிவிட்டதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஒமைக்ரான் தொற்றின் பாதிப்பு குறைவாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சௌமியா சுவாமிநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசிகள் ஒமைக்ரான் போன்ற பிற உருமாற்றமடைந்த கொரோனா தொற்றுகளை எதிர்கொள்கிறது.

மேலும் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக டி செல் நோய் எதிர்ப்புச் சக்தி சிறப்பாக உள்ளது. இது கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். யாரேனும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்தால் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories