உலகம்

வீட்டின் பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட கல்லூரி மாணவி.. அமெரிக்காவில் நடந்தது என்ன?

பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்துவைக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவியை போலிஸார் மீட்டனர்.

வீட்டின் பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட கல்லூரி மாணவி.. அமெரிக்காவில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவியைக் காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், காணாமல்போன மாணவி கடைசியாகத் தனது உறவினர்களுக்கு 'ஐ லவ் யூ' என மெசேஜ் அனுப்பியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவரது செல்போன் எண்ணைக்கொண்டு அவர் கடைசியாக எங்கு இருந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியுடன் செல்போனில் தொடர்பிலிருந்த 500 பேரிடம் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் பிரவுன் என்பவர் வீட்டில் போலிஸார் மாணவி குறித்து விசாரிக்கச் சென்றனர். அப்போது வீட்டில் தான் மட்டும் தனியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து போலிஸார் வீட்டிற்கு வெளியே சோதனை செய்தபோது காணாமல் போன மாணவியின் கல்லூரி ஐ.டி கார்டு கிடைத்துள்ளது.

வீட்டின் பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட கல்லூரி மாணவி.. அமெரிக்காவில் நடந்தது என்ன?

இதையடுத்து போலிஸார் பிரவுன் வீட்டில் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது பாதாள அறை ஒன்றில் கல்லூரி மாணவி நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். பிறகு அவரை மீட்ட போலிஸார், அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பிரவுனிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கல்லூரி மாணவி ஆன்லைன் மூலம் பிரவுனிக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.பிறகு மாணவியை நேரில் சந்திக்கலாம் என கூறி பிரவுனி அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அப்போது, அவர் மாணவியிடம் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் வலுக்கட்டாயமாக மாணவியை வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர் அவரை வீட்டிலிருந்த பாதாள அறையில் நிர்வாணமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை போலிஸார் கைது செய்தனர். மாணவி காணாமல் போய் ஐந்து நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories