உலகம்

“4 இளம் பெண்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்” : ‘பகீர்’ சம்பவத்தின் பின்னணி என்ன ?

கடையில் திருடியதாகக் கூறி நான்கு பெண்களை அடித்து நிர்வாணப் படுத்திய கொடூர சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

“4 இளம் பெண்களின் ஆடைகளை கிழித்து நிர்வாணப்படுத்தி கொடூர தாக்குதல்” : ‘பகீர்’ சம்பவத்தின் பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாகிஸ்தானில் அண்மைக் காலமாகப் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் மற்றும் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. பொது வெளியிலேயே பெண்களைக் கும்பலாகத் தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், கடையில் திருடியதாகக் கூறி நான்கு பெண்களை அடித்து நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்வான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளம் பெண்கள் நான்கு பேரை அடித்து நிர்வாணப்படுத்தப் படுகிறார்கள்.

அப்போது அப்பெண்கள் கதறி அழுது கொண்டே தங்களை விடுவிக்குமாறு கூறுகின்றனர். இருந்த போதும் அங்கிருந்தவர்கள் அவர்களை அடித்துக் கொண்டே இருப்பது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளது.

மேலும், அந்த பெண்களை ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாகக் கூட்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. கடை ஒன்றில் அவர்கள் திருடியதால் இந்த தண்டனை வழங்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, பெண்களைத் தாக்கி நிர்வாணப்படுத்திய ஐந்து பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், “அன்றைய தினம் பாவா சாக் மார்க்கெட்டுக்கு குப்பை பொருட்களைச் சேகரிக்க சென்றோம்.

மிகவும் தாகமாக இருந்ததால் உஸ்மான் எலக்ட்ரிக் கடைக்குள் சென்று தண்ணீர் கேட்டோம். ஆனால் தண்ணீர் கேட்ட எங்களை திருட வந்தவர்களாக நினைத்த அக்கடையின் உரிமையாளர் சதாம் எங்களை சிலருடன் சேர்ந்து கொண்டு தாக்கினார்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories