உலகம்

"ஒரு நாள் முழுக்க காதில் குடியிருந்த சிலந்தி" : மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண்ணின் காதில் சிலந்தி பூச்சி உயிருடன் இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

"ஒரு நாள் முழுக்க காதில் குடியிருந்த சிலந்தி" : மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் 'யி'. இளம்பெண்ணான இவரது காதில் திடீரென ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்துள்ளது. மேலும் கடுமையான வலியும் ஏற்பட்டுள்ளது.

முதல்முறையாக இதுபோன்று உணர்ந்ததால் அந்தப் பெண் உடனே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதை முதலில் கண்டுபிடித்தனர்.

பிறகு, அவரது காதில் ஒரு படக்கருவியைப் பொருத்திப் பரிசோதித்துப் பார்த்தபோது காதுச் சவ்வின் மேற்பரப்பில் சிலந்தி ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், மருத்துவர்கள் எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் என்ற கருவியைக் காதுக்குள் செலுத்தி சிலந்திப்பூச்சியை வெளியே எடுத்தனர். இதையடுத்து அந்த பெண்ணுக்கு வலி ஏற்படுவது நின்றது.

இதுபோன்று சீனாவில் 2019ஆம் ஆண்டு இளைஞர் ஒருவரின் காதில் நீண்ட நாட்களாக சிலந்தி ஒன்று இருந்து கூடு கட்டி இருந்ததை அறிந்து, மருத்துவர்கள் அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories