உலகம்

“இனி தவறு செய்தால் தலை வெட்டப்படும்”: கொடூர தண்டனைகளை அறிவித்த தாலிபான்கள் - அதிர்ச்சியில் ஆப்கன் மக்கள்!

தவறு செய்பவர்களின் கை, கால்கள் வெட்டப்படும் என தாலிபான்கள் அறிவித்துள்ளது ஆப்கன் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இனி தவறு செய்தால் தலை வெட்டப்படும்”: கொடூர தண்டனைகளை அறிவித்த தாலிபான்கள் - அதிர்ச்சியில் ஆப்கன் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றி புதிய அதிபரை அறிவித்து ஆட்சி செய்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளதால் ஆப்கன் மக்கள் பீதியடைந்து நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதிலிருந்தே பெண்களையும், பத்திரிகையாளர்களையும், கலைஞர்களையும் அடித்து துன்புறுத்தி கொலை செய்து வருகிறார்கள் தாலிபான்கள். இந்நிலையில் பொதுமக்கள் தவறு செய்தால் அவர்களின் கை, கால்கள் வெட்டப்படும், மேலும் கல்லால் அடித்து கொலை செய்யப்படுவார்கள் என தாலிபான்கள் அறிவித்துள்ளது ஆப்கன் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தாலிபான்களின் முக்கிய தலைவரும், ஆப்கானிஸ்தானின் சிறைத்துறைத் தலைவருமான முல்லா நூருதின் துராவி கூறுகையில், "தலையை வெட்டுவது, கை, கால்களை வெட்டுவது, போன்ற தண்டனைகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு மிகவும் தேவை. அவை மீண்டும் அமலுக்குக் கொண்டு வரப்படும். ஆனால் முன்பு போல் பொதுமக்கள் முன்னிலையில் அந்த தண்டனைகளை நிறைவேற்ற மாட்டோம்.

“இனி தவறு செய்தால் தலை வெட்டப்படும்”: கொடூர தண்டனைகளை அறிவித்த தாலிபான்கள் - அதிர்ச்சியில் ஆப்கன் மக்கள்!

ஷரியா சட்டப்படி, திருமணமாகாதவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுக்கான சவுக்கடி தண்டனை பொதுமக்கள் முன்னிலையில் தான், அதே நேரத்தில் திருமணமானவர்கள் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் அவர்கள் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள்.

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அது நிரூபிக்கப்பட்டால் அவர்களின் கைகள் வெட்டப்படும். பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனைகளை அளிப்பதா வேண்டாமா என அமைச்சரவை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது, விரைவில் இது தொடர்பான கொள்கை முடிவு எடுக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை தாலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது இந்த கொடூரமான தண்டனைகள் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இவர்கள் இதே தண்டனை முறைகளை கையில் எடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories