உலகம்

அடுத்தடுத்து அமெரிக்காவை பீடித்த பேரிடர்கள்.. முடங்கிய மக்கள்; நியூயார்க்கை துவம்சம் செய்த இடா புயல்!

நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களை இடா புயல் புரட்டிப் போட்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்து அமெரிக்காவை பீடித்த பேரிடர்கள்.. முடங்கிய  மக்கள்; நியூயார்க்கை துவம்சம் செய்த இடா புயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்பில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில் அமெரிக்காவை இயற்கை பேரிடர்கள் சூழ்ந்துள்ளது அந்நாட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

அவ்வகையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதியன்று அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தை தாக்கிய இடா புயலால் நகரின் பெருமளவு பகுதி நாசமாகியுள்ளது. வீடுகள், சுரங்கப்பாதைகள் என அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கி தீவு போல் காட்சியளிக்கிறது.

மேலும் ஆறு லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கான மின்சார சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இடா புயலுக்கு இதுவரையில் 82 பேர் பலியாகியிருப்பதாக நியூயார்க் காவல்துறை தெரிவித்துள்ளது.

நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களை இடா புயல் புரட்டிப் போட்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் மீட்புப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடவில்லை கூறுகின்றனர்.

இதேபோன்று, வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் டூலா நகரில் அண்மைக்காலமாக பெய்துவரும் கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடானது. மேலும் நகரில் உள்ள மருத்துவமனையை சுற்றி மழை நீர் குளம் போல் தேங்கியதால் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அங்கு சிகிச்சையில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுத்திணறி உயிரிழந்த்தாக மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

இவ்வாறு அடுத்தடுத்து அமெரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளை பேரிடர்கள் பீடித்து வருவது மனித குலம் அழிவை நோக்கி செல்லும் காலத்தை நெருங்குவதையே குறிக்கிறது என சூழலியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories