உலகம்

“பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள முல்லா ஹசன் ஆப்கான் பிரதமராக நியமனம்” : யார் இந்த முல்லா ஹசன்?

ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

“பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள முல்லா ஹசன் ஆப்கான் பிரதமராக நியமனம்” : யார் இந்த முல்லா ஹசன்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை வெளியேறிவிட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர்.

பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அறங்கேறியது. இந்நிலையில் மீண்டும் தங்களது கட்டுப்பாடுகளை நாட்டுமக்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ளனர்.

இந்நிலையில், தாலிபான் ஆப்கானிஸ்தானில் அரசு கட்டமைப்பை நிறுவதற்காக முயற்சியில் இறங்கி சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு யார் யாருக்கு எந்த பதவிகள் வழங்குவது போன்ற பரிந்துரைகளை வழங்கியிருந்தது.

“பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள முல்லா ஹசன் ஆப்கான் பிரதமராக நியமனம்” : யார் இந்த முல்லா ஹசன்?

அந்த குழுவின் பரிந்துரையின்படி, ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்ட்டுள்ளார். புதிய அரசின் அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் அமைப்பு வெளியிட்டது. இதில், முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி துணைத் தலைவராகவும் இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேபோல், உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா மொஹம்மத் யாகூப் முஜாஹித், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி, வெளியுறவுத்துறை அமைச்சராக மெளவி ஆமிர் கான் முட்டாக்கி, நிதியமைச்சர் முல்லா ஹிதாயத் பத்ரியும் நீதித்துறை அமைச்சராக அப்துல் ஹக்கீம் இஷாக்ஸி, தகவல் துறை அமைச்சராக கைருல்லா சயீத் வாலி கெய்ர்க்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தாலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், முறைப்படி அரசு அமையும்வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்துவார்கள் என்று தாலிபான் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

“பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள முல்லா ஹசன் ஆப்கான் பிரதமராக நியமனம்” : யார் இந்த முல்லா ஹசன்?

இதில் பிரதமராக அறிவிக்கப்பட்ட, முல்லா ஹஸன் அகுந்த் யார்?

இவர் தாலிபான் நிறுவனர்களில் ஒருவர். இப்போது அரசியல் தலைமையகப் பொறுப்பை நிர்வகிக்கிறார்.

இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தோஹாவில் நடைபெற்ற ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தையில் தாலிபான் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

இவர் தாலிபான் நிறுவனம் முல்லா முகமது ஒமரின் மிகவும் நம்பிக்கைக்குரிய கமாண்டர்.

2010 ஆம் ஆண்டு இவர் பாகிஸ்தானின் கராச்சியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்குப் பின்னர் 2018ல் அவர் விடுவிக்கப்பட்டார்.

ட்ரம்ப் அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் விடுவிக்கப்பட்டார். அவரை அமெரிக்கா, அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நம்பகத்தன்மை நிறைந்த முகமாகக் கருதியது.

முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார்.

முல்லா பரதார் இன்று ஆப்கன் வந்தபோது தாலிபான்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றனர். ஆனால், மக்கள் இதை எப்படி வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories