உலகம்

புதிய அதிபர் அறிவிக்கப்பட்ட அன்றே 5 பத்திரிகையாளர்கள் கைது : சர்வாதிகார ஆட்சியை காட்டிய தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்ட முதல் நாளிலேயே ஐந்து பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அதிபர் அறிவிக்கப்பட்ட அன்றே 5 பத்திரிகையாளர்கள் கைது : சர்வாதிகார ஆட்சியை காட்டிய தாலிபான்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை வெளியேறியதை அடுத்து கடந்த 15ஆம் தேதியிலிருந்து நாட்டையே தன் முழு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகளும் தங்கள் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

மேலும், தாலிபான்களுக்குப் பயந்து ஆப்கானிஸ்தான் மக்களும் அண்டை நாடுகளுக்குத் தப்பிச் சென்று வருகிறார்கள். இதையடுத்து நாங்கள் கடந்த ஆட்சியிலிருந்ததை போல் இருக்கமாட்டோம் என தாலிபான்கள் கூறிவருகின்றனர்.

ஆனால், இவர்களின் செயல் ஒவ்வொன்றும், இதற்கு எதிராகவே உள்ளது. கர்ப்பிணி போலிஸ் அதிகாரி, நாட்டுப்புற பாடகர் ஆகியோரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்குப் இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு எதிராக இருந்தவர்களை தேடிப்பிடித்து தாலிபான்கள் கொலை செய்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியருக்கு இடையே திரையை வைத்து பாடம் நடத்தும் புகைப்படங்கள் இணையங்களில் வெளியானது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் புதிய அமைச்சரவை பட்டியலையும் தாலிபான் அமைப்பு வெளியிட்டுள்ளது. இது முறைப்படி அரசு அமையும் வரை இடைக்காலமாக அமைச்சரவையை வழிநடத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அதிபர் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஐந்து பத்திரிகையாளர்களை தாலிபான்கள் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சி செய்தபோது அதிகமான பத்திரிகையாளர்களை கொலை செய்துள்ளனர்.

மேலும் 1996 முதல் 2001ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த வரை தொலைக்காட்சி மற்றும் பெரும்பாலான பொழுதுபோக்குகள் தடை செய்யப்பட்டிருந்தன. மக்களின் கருத்துக்களைக் கூறுவதற்கென எந்த ஒரு ஊடகமும் இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories