உலகம்

சிம்பன்ஸி மீது காதல்... தடை போட்ட பூங்கா நிர்வாகம்... கண்கலங்கும் பெண் - பெல்ஜியத்தில் ஆச்சர்ய நிகழ்வு!

மனிதக் குரங்கின் மீது பெண் வனவிலங்கு ஆர்வலர் ஒருவர் காதலுற்ற சம்பவம் பெல்ஜியம் நாட்டவரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிம்பன்ஸி மீது காதல்... தடை போட்ட பூங்கா நிர்வாகம்... கண்கலங்கும் பெண் - பெல்ஜியத்தில் ஆச்சர்ய நிகழ்வு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஹாலிவுட்டில் வெளியாகி உலகமெங்கும் ஹிட் அடித்த படம் ‘கிங்காங்’. ஒரு மனிதக் குரங்குக்கு பெண் மேல் ஏற்படும் காதலும் அவர்களின் ஏக்கம், பிரிவு, அன்பு இவற்றைச் சொல்லும் விதத்திலும் இந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன.

நிஜத்தில், 38 வயதான சிம்பன்ஸி குரங்கு மீது பெண் வனவிலங்கு ஆர்வலர் ஒருவருக்கு காதல் மலர்ந்துள்ளது. பெல்ஜியம் நாட்டில் வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. இந்தப் பூங்காவுக்கு வனவிலங்கு ஆர்வலர் அடிய் டிம்மர்மான்ஸ் (Adie Timmermans) அடிக்கடி சென்று பார்வையிட்டு வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள சீட்டா என்ற சிம்பன்ஸி மீது அடிய்க்கு காதல் மலர்ந்துள்ளது. மேலும், சீட்டாவை கொஞ்சுவதற்காகவே வாரம் ஒருமுறை அந்தப் பூங்காவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அடிய் உடனான பழக்கத்துக்குப் பின் சீட்டா மனிதர்களை மட்டுமே கவனிப்பதாகவும் மற்ற விலங்குகளிடம் பழகுவதில்லை என்றும் வனவிலங்கு பூங்கா நிர்வாகத்தினர் குற்றம்சாட்டி, அடிய் அங்கு வர தடை விதித்தனர்.

சீட்டா மற்ற மனிதக் குரங்குகளை போன்று இருக்கவேண்டும் என்பதாலேயே அடிய்க்கு தடை விதித்துள்ளோம் என்றும் பூங்கா நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அடிய் கூறுகையில், “நானும் சீட்டாவும் ஒருவொருக்கொருவர் புரிந்துகொண்டோம், இருவரும் காதலிக்கிறோம். எங்களை பிரிக்க நினைக்கின்றனர்” என்று கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார்.

- உதயா

banner

Related Stories

Related Stories