உலகம்

அரிய வகை நோய்க்கு சிகிச்சை பெற்ற குழந்தைக்கு ஏற்பட்ட பக்க விளைவு... அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

பச்சிளம் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் பக்க விளைவு காரணமாக முதுகு, கை, கால் என உடல் முழுவதும் முடி வளர்ந்து வருவது மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரிய வகை நோய்க்கு சிகிச்சை பெற்ற குழந்தைக்கு ஏற்பட்ட பக்க விளைவு... அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்காவை சேர்ந்த பச்சிளம் குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் பக்க விளைவு காரணமாக முதுகு, கை, கால் என உடல் முழுவதும் முடி வளர்ந்து வருவது மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்த மேட்டியோ ஹெர்னாண்டஸ் என்ற குழந்தைக்கு, பிறந்த ஒரு மாதத்திலேயே பிறவி ஹைபர் இன்சுலினிசம் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அரிய வகை நோயான இது கணையத்தில் அதிக அளவு இன்சுலின் உற்பத்தி செய்யும்.

குழந்தைக்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்தததால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு உயிர் காக்கும் கருவிகளால் சிகிச்சையளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் குழந்தையின் உடலில் திடீர் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் ஏதேனும் பக்க விளைவு இருக்குமோ என அஞ்சி மருத்துவரை அணுகினர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தைக்கு ஹைபர் இன்சுலினிசம் நோய்க்கு வழங்கப்பட்ட மருந்தினால் பக்க விளைவு ஏற்பட்டு கை, கால், முதுகு, தொடை என உடல் முழுவதும் முடி வளர தொடங்கியதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து முடியை அகற்றலாமா என்று பெற்றோர் கேட்டதற்கு, அகற்றினால் மேலும் பக்க விளைவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

- உதயா

banner

Related Stories

Related Stories