வைரல்

“இனி பானிபூரி சாப்பிடும் போதெல்லாம் இதானே ஞாபகம் வரும்” : வைரல் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!

பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனது சிறுநீரை பக்கெட்டில் கலக்கும் காட்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இனி பானிபூரி சாப்பிடும் போதெல்லாம் இதானே ஞாபகம் வரும்” : வைரல் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பரத் நடித்த ‘காதல்’ திரைப்படத்தில் ஒருவர், தனது முதலாளியின் நண்பர் மேல் உள்ள கோபத்தில் குளிர்பானத்தில் சிறுநீர் கழித்து அவருக்குக் குடிப்பதற்குக் கொடுப்பார்.

அதைக் கண்டுபிடித்த முதலாளியின் நண்பர் அவரை பின்னி பெடலெடுத்திருப்பார். கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு சம்பவம் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் அரங்கேறியிருக்கிறது.

சாலையோர கடைகளுக்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை . சிலர் ருசிக்காகவும் சிலர் குறைவான விலை என்பதாலும் சாலையோரக் கடைகளில் சாப்பிடுவார்கள். ஆனால் சுகாதாரத்தை யார் பார்க்கிறார்கள் என்றால் அது கேள்விக்குறியே.

இந்நிலையில், சாலையோரத்தில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை நடத்தும் ஒருவர் தனது சிறுநீரை பானி (நீர்) உள்ள பக்கெட்டில் கலக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவை பதிவிட்டவர், “தனது சிறுநீரை பானிபூரிக்கு வைக்கும் ரசத்தில் கலக்கிறார் கடை உரிமையாளர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை போலிஸார் கைது செய்துள்ளனர். யார் மேல் உள்ள கோபத்தில் அவர் இப்படி செய்தார் என்றுதான் தெரியவில்லை.

- உதயா

banner

Related Stories

Related Stories