உலகம்

"வெறும் 11 நிமிடங்கள் தானே.." பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: நீதிபதி சொன்ன பகீர் காரணம்!

பாலியல் வன்கொடுமை சம்வம் 11 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாக கூறி, குற்றவாளியின் தண்டனைக் காலத்தை நீதிமன்றம் குறைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"வெறும் 11 நிமிடங்கள் தானே.." பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: நீதிபதி சொன்ன பகீர் காரணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதுமே பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க அரசு பல நடவடிக்கை எடுத்தபோதும் குற்றத்தை தடுக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில், 11 நிமிடம் மட்டுமே இளம்பெண்ணை குற்றவாளி பாலியல் வன்கொடுமை செய்துள்ள காரணத்தால், அவருக்கான தண்டனையை பெண் நீதிபதி குறைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 33 வயதாகும் இளம்பெண் ஒருவர் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அதே பேருந்தில் பயணம் செய்த 17 வயது சிறுவன் மற்றும் அவருடைய நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனையடுத்து இருவர் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை சிறார் நீதிமன்றம் விசாரித்து வரும் வேளையில், 32 வயதாகும் இளைஞரை மற்றோரு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளி அந்த பெண்ணை 11 நிமிடம் மட்டுமே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனால் தண்டனை குறைக்கப்படுகிறது எனக் கூறி, 56 மாத சிறை தண்டனையை 36 மாதங்களாக மாற்றி நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.

நீதிபதியின் இத்தகைய தீர்ப்பு அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories