உலகம்

“Facebook-ல் இருந்து 50 கோடி பேரின் தகவல் திருட்டு” : புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !

ஃபேஸ்புக்கில் இருக்கும் 50 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்களின் சொந்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“Facebook-ல் இருந்து 50 கோடி பேரின் தகவல் திருட்டு” : புலனாய்வு நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் ஃபேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக்கத்தான் இருக்கும். முதலில் ஃபேஸ்புக் கணக்கைத் துவங்குவதற்கு முன்பு நாம் சில சொந்த விவரங்களைப் பதிவு செய்வோம். இந்த விவரங்கள் யாரும் திருட முடியாது என ஃபேஸ்புக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

ஆனால் சமீபகாலமாக ஃபேஸ்புக் பயனாளர்களின் விவரங்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், 50 கோடிக்கும் மேற்பட்ட ஃபேஸ்புக் கணக்கர்களின் சொந்த விவரங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பிசினஸ் இன்சைடர் தளம் வெளியிட்ட தகவலில், 106 நாடுகளில் உள்ள ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்கள், ஃபேஸ்புக் ஐடி, பெயர்கள், வசிக்கும் இடம், பிறந்தநாள் மற்றும் இ- மெயில் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனின் பல்வேறு இணையதளங்களில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், ஹட்சன் ராக் சைபர் கிரைம் புலனாய்வு நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அலோன் கால், தனது ட்விட்டரில் பதிவில் சுமார் 53,30,00,000Facebook பயனர்களின் தகவல்கள் இலவசமாகக் கசிய விடப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

தற்போது கசிந்த தகவல்கள், முகநூலில் பயன்படுத்தப்பட்டு வரும் கணக்குகள் தொடர்பான தகவல்கள் என்றும், பயனர்கள் இன்னும் கணக்கில் பதிவு செய்துள்ள அதே தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவலையும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த தகவல் ஃபேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் பீதியடை செய்துள்ளது.

முன்னதாக கடந்த 2018 ஆண்டு ஃபேஸ்புக்கில், மொபைல் எண் மூலம் ஒருவரை தேடும் ஆப்ஷன் தடை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு உக்ரைனைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இருக்கும் வாடிக்கையாளர்களின் பெயர்கள், மொபைல் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைனில் பரவலாகக் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

கடந்த சில வருடங்களாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்களை பாதுகாப்பதில் சிக்கலைச் சந்தித்து வருகிறது. தற்போது 50 கோடிக்கும் மேற்பட்டோர் கணக்குகள் இணைங்களில் கசிந்துள்ளது ஃபேஸ்புக் பயனாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories