
தமிழ்நாட்டில் நடப்பாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி 2026) 3.36 விழுக்காடாக இருந்த பணவீக்கம் (Inflation), படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 5.92 விழுக்காடாக உச்சம் தொட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் வாழும் எளிய மக்கள் கடும் பொருளியல் நெருக்கடிக்கு இடையில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் கடுமையாக கண்டித்து வரும் நிலையிலும், அதனை ஒரு பொருட்டாக மதிக்காமல், தாந்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறது த.வெ.க அரசு.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வை உறுதிப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு பணவீக்கம் தொடர்பான தரவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவிலேயே பணவீக்கம் அதிகம் இருக்கும் மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பது வெளிப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.24 விழுக்காடாகவும், ஜூலையில் 5.44 விழுக்காடாகவும் இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 5.92 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அதிகப்படியான பணவீக்கத்தால் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி என அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எனினும், இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், அவதூறுகளை பரப்பி திசைதிருப்பல் அரசியலை மேற்கொண்டு வருகிறது த.வெ.க அரசு.
மக்களின் துயரை புறக்கணித்து, தூய சக்தி என தன்னை காட்சிப்படுத்திக்கொள்ளும் த.வெ.க.விற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.






