உலகம்

“பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி” : 30 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது அர்ஜென்டினா அரசு!

கருக்கலைப்புக்கு அனுமதி அளித்து அர்ஜென்டினாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

“பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி” : 30 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது அர்ஜென்டினா  அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் உலகில் மிக முக்கிய கோரிக்கையான கருக்கலைப்புச் சட்டத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அர்ஜென்டினா காங்கிரஸ், கர்ப்பகாலத்தின் 14-வது வாரம் வரையில் கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, 1921 முதல் அங்குள்ள பெண்கள் சுதந்திரமாக கருக்கலைப்பை செய்ய அர்ஜென்டினாவில் அனுமதி மறுக்கப்பட்ட வந்தது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமைகளில் அல்லது பெண்ணின் உடல்நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையும், சுவிசேஷ சமூகமும் அனைத்து பெண்களுக்குமான கருக்கலைப்பை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால், கடந்த 1983 முதல் 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் ரகசிய கருக்கலைப்பின் போது உயிரிழந்துள்ளனர்.

“பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி” : 30 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது அர்ஜென்டினா  அரசு!

இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்தும், கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கக் கோரியும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட வந்தனர்.

இதனிடையே, கடந்த 2006-ம் ஆண்டில், மனநலக் குறைபாடுகள் கொண்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தப்பித்த நிலையில், 25 வயதான அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில், அந்த பெண்ணுக்கு நீதிமன்றம் கருக்கலைப்பு செய்ய அனுமதி அளிக்கபட்ட நிலையில், கத்தோலிக்க அமைப்பின் தடை காரணமாக உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தடுக்கப்பட்டது. அதன்பின்னர் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.

“பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி” : 30 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது அர்ஜென்டினா  அரசு!

அதன்படி, தேர்தலில் மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றது. ஆல்பர்ட்டோ ஃபெர்னாண்டஸ் அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் ஆதரவு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கடந்தவாரம் கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் மசோதாவிற்கு, மராத்தான் அமர்வில் 38 செனட்டர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், கருக்கலைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி அந்த சட்டத்தில், 14 வாரம் வரையிலான கருக்கலைப்பு, பாலியல் வன்கொடுமை, பெண்ணின் உடல்நிலைக்கு ஆபத்து உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பு செய்யலாம் எனத் தெரிவிக்கிறது.

“பெண்கள் கருக்கலைப்புக்கு அனுமதி” : 30 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது அர்ஜென்டினா  அரசு!

மேலும், இந்த சட்டம் குறித்து அதிபர் ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று நம் அரசு ஒரு சிறந்த முடிவை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்துகிறது மற்றும் பொது சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இந்தச் சட்டத்திற்கு பெண்கள் அமைப்பினர் பலர் ஆதரவு அளித்துள்ளனர். இந்தச் சட்டம் இயற்றிய நாளே எங்களின் புத்தாண்டு என பெண்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories