உலகம்

“இழந்தவர்களுக்கு நல்ல நாள் இல்லை..ஆனால் பலருக்கு இது நல்ல நாள்தான்” - நேரலையில் ட்ரம்பை சாடிய CNN நிருபர்

பைடனின் வெற்றி உறுதியானதை அறிந்து நேரலையின் போது கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

“இழந்தவர்களுக்கு நல்ல நாள் இல்லை..ஆனால் பலருக்கு இது நல்ல நாள்தான்” - நேரலையில் ட்ரம்பை சாடிய CNN நிருபர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவின் 46வது அதிபராக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றியைத் தொடர்ந்து அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது அந்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடனும், கமலா ஹாரிஸும் வெற்றி பெற்றதை அமெரிக்க மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல செய்தி தொலைக்காட்சியான CNN-ன் அரசியல் நிருபரான கருப்பினத்தைச் சேர்ந்த ‘வான் ஜோன்ஸ்’ பைடனின் வெற்றி உறுதியானதை அறிந்து நேரலையின் போது கண்ணீர் விட்டு உணர்ச்சிகரமாக பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், இன்றைய காலை பொழுதில் பெற்றோராக தந்தையாக இருப்பது எளிதானது. அதேபோல உங்களுடைய குழந்தைகளிடம் நல்ல குணமும், தன்மையும் முக்கியமானது என தெரிவியுங்கள். அவர்களிடம் உண்மையை தெரிவிப்பது முக்கியமானது. நல்ல நபராக, மனிதராக இருப்பது முக்கியமானது என கூறுங்கள்.

இந்த நாட்டில் நீங்கள் முஸ்லிமாக இருந்தால் ஜனாதிபதிக்கு உங்களை பிடிக்காது, நீங்கள் இங்கு இருக்கக்கூடாது என நினைத்தால் கவலைப்பட தேவையில்லை. குடியேறியவர்களாக இருந்தால் எந்த காரணமும் இல்லாமல் ஜனாதிபதி உங்களது கனவுகளை திருப்பி அனுப்புவார் என கவலைப்பட வேண்டாம். இது துயரப்பட்ட நிறைய பேருக்கு நிரூபணமாகியுள்ளது. என்னால் சுவாசிக்க முடியவில்லை..? அது வெறும் ஜார்ஜ் ஃப்ளாய்ட்டுக்கு மட்டுமல்ல. மூச்சு விட முடியாமல் நிறைய மக்கள் இருந்தார்கள்.

ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு இனிமேல் மன அமைதி கிடைக்கும் மற்றும் மீட்டமை செய்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாட்டின் குணமும், மனிதர்களின் குணமும் முக்கியமானதாக கருதுகிறோம். இதனை என் மகன் காண விழைகிறேன். இது நாட்டின் நல்ல நாளாக இருக்கிறது. தோல்வியடைந்தவர்களுக்கு இது நல்ல நாளாக இருக்காது. ஆனால் பலருக்கு நல்ல நாளாகவே உள்ளது.” என வான் ஜோன்ஸ் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories