உலகம்

“அடுத்த ஆண்டுக்குள் 15 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்” - உலக வங்கி எச்சரிக்கை!

கொரோனா வைரஸால் 2021ம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸால் 2021ம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளது என்றும் உலக நாடுகள் “வேறுபட்ட பொருளாதாரத்திற்கு” தயாராக வேண்டும் என்றும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 கோடியே 60 லட்சம் பேருக்கு அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச நாணய நிதியம் ஆகியவை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றன. 2021-ம் ஆண்டில் 15 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி கூறியுள்ளது.

இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக உலக மக்கட்தொகையில், 1.4 சதவீதத்திற்கும் அதிகமானோர் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். 2021ம் ஆண்டில் 15 கோடி மக்கள் கடும் வறுமையில் இருக்க வாய்ப்புள்ளது.

“அடுத்த ஆண்டுக்குள் 15 கோடி மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தள்ளப்படுவார்கள்” - உலக வங்கி எச்சரிக்கை!

ஏற்கனவே அதிக வறுமையில் உள்ள மக்கள் வாழும் நாடுகளில் புதிய ஏழைகள் உருவாவார்கள். பல நடுத்தர வருமான நாடுகளில் கணிசமான மக்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்வார்கள். இதனால் 2030-ல் வறுமையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இலக்கை அடைவது கடினம்.

கொடூரமான இந்த நிலையை மாற்ற வேறுபட்ட பொருளாதாரத்திற்கு உலக நாடுகள் தயாராக வேண்டும். மூலதனம், தொழிலாளர், திறன்கள் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளில் அனுமதிப்பதன் மூலம், இது சாத்தியப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories