தமிழகத்தில் இன்று புதிதாக 5,447 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 6,35,855 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 91,401 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 7,25,962 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 1,369 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையை தவிர பிற மாவட்டங்களில் இன்று 4,078 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 67 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9,984 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 5.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் தமிழகத்தில் 45,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரளாவில் இன்று உச்சபட்சமாக 10,606 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில்,
"கேரளாவில் புதிதாக 10,606 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று 22 பேர் கொரோனா தொற்றால் பலியாகினர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில், கேரளாவில் 92,161 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 1,60,253 பேர் குணமடைந்துள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.