உலகம்

”கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாவது நம் நாட்டுக்கு அவமானம்”- ட்ரம்ப் சர்ச்சை பேச்சு!

கமலா ஹாரிஸ் முதல் பெண் ஜனாதிபதியாக வருவது அமெரிக்காவை அவமதிப்பதாகும் என டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்கத் தேர்தல் பரப்புரையில் சர்ச்சை பேச்சு.

”கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாவது நம் நாட்டுக்கு அவமானம்”- ட்ரம்ப் சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்க பொதுத்தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸை மக்களுக்குப் பிடிக்கவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கிப்பேசியுள்ளார். அவர் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியானால் அது அமெரிக்காவுக்கே அவமானம் எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய ட்ரம்ப், ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் ஜோ பிடேன் வென்றால் சீனா வென்றதற்கு சமம் என்று தெரிவித்தார். “இதை ஞாபகம் வைத்துக்கொள்வது சுலபம். பிடேன் வெற்றி பெற்றால் சீனா வெல்லும். இந்த உலகின் வரலாற்றில் நாம் ஒரு சிறந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும்போது சீன பெருந்தொற்று உள்ளே வந்துவிட்டது.” என ட்ரம்ப் பேசியுள்ளார்.

மேலும் கமலா ஹாரிஸ் பற்றிப் பேசுகையில் “மக்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. யாருக்கும் அவரைப் பிடிக்காது. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக அவர் ஆக முடியாது. அது இந்த நாட்டுக்கே அவமானம்.” எனத் தெரிவித்தார்.

மேலும் சீனாவும் போராட்டக்காரர்களும் ஏன் பிடேன் வெல்லவேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் அவருடைய திட்டங்கள் அமெரிக்காவுக்கு வீழ்ச்சியைத் தரும். அது மட்டுமல்லாமல் சீனாவுடனான வர்த்தகா ஒப்பந்தத்தை வேறு விதமாக தற்போது பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories