உலகம்

‘டொனால்ட் ட்ரம்ப் கொடூரமானவர்’ - ட்ரம்பின் சகோதரி பேசியுள்ள ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு!

டொனால்ட் ட்ரம்பின் சகோதரி பேசிய ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘டொனால்ட் ட்ரம்ப் கொடூரமானவர்’ - ட்ரம்பின் சகோதரி பேசியுள்ள ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு எந்த வகையான கொள்கைகளும் கிடையாது என்றும் அவர் மிகவும் கொடூரமானவர் என்றும் அவரது சகோதரி மரியான் ட்ரம்ப் பேரி தெரிவித்துள்ள ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் சகோதரி மரியான் ட்ரம்பின் மகள் மேரி எல் ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்பை பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் அதிபர் ட்ரம்ப் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு என்ன ஆதாரம் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை கேள்வி எழுப்பியது.

அந்த கேள்விகளுக்குப் பதிலாக பேரி, ட்ரம்பிடம் பேசும்போது ரகசியமாக பதியப்பட்ட ஆடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

மரியானே டிரம்ப் தன் சகோதரரின் மகளாகிய மேரி எல் டிரம்பிடம் பேசிய ஆடியோவில் “அவருக்கு எந்த விதமான கொள்கைகளும் கிடையாது. எதுவும் இல்லை. அவருடைய அடிப்படையே தவறானது. என்ன சொல்ல வருகிறேன் என்றால் நீங்கள் மதம் சார்ந்த மனிதராக இருந்தால், நீங்கள் மக்களுக்கு உதவவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய சகோதரர் அதிபராகச் செயல்படுவது குறித்துப் பேசியுள்ள அவர் “அவரது ட்வீட்களும், பொய்களும். அய்யோ கடவுளே.. நான் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறேன். கதைகளை மாற்றிச் சொல்வது. எந்த வித தயாரிப்பும் இல்லாமல் இருப்பது. பொய் கூறுவது.” என பல விஷயங்களைத் தன்னுடைய சகோதரரைப் பற்றி மரியானே ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் எதையெல்லாம் வாசித்திருக்கிறார் என்ற கேள்விக்கு மரியான் “இல்லை. அவர் எப்போதும் வாசிப்பதில்லை.” எனச் சொல்கிறார். மேலும் “எல்லாவற்றையும் விட அவரிடம் உள்ள வஞ்சகம். அவரிடம் உள்ள அந்த வஞ்சகமும் மூர்க்கத்தனமும். டொனால்ட் கொடூரமானவர்.” என அவர் பேசியுள்ளது ஆடியோவில் பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories