உலகம்

“ட்விட்டர் கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் தரவிறக்கியது எதற்காக?” - ட்விட்டர் நிறுவனம் சந்தேகம்!

முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

“ட்விட்டர் கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் தரவிறக்கியது எதற்காக?” - ட்விட்டர் நிறுவனம் சந்தேகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ட்விட்டர் நிறுவனம்.

சமீபத்தில், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரபல தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில்கேட்ஸ், வாரன் பபேட், பெஜோஸ், மைக் புளூம்பர்க், அமெரிக்க முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனின் உட்பட பல பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு க்றிப்டோ கரன்ஸி, பிட் காயின் மோசடிப் பதிவுகள் அந்தப் பக்கங்களில் பகிரப்பட்டன.

இந்த நிகழ்வு உலகளவில் ட்விட்டர் பயனர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஹேக்கிங் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரிக்க எஃப்.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ட்விட்டர் தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், சுமார் 130 பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் குறிவைத்ததாகவும், இதில் 45 கணக்குகளின் கடவுச்சொல்லை மாற்றி, லாக்-இன் செய்தே ட்வீட்டுகளைப் பகிர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ட்விட்டர் கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் தரவிறக்கியது எதற்காக?” - ட்விட்டர் நிறுவனம் சந்தேகம்!

மேலும், “ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் என்ன நடவடிக்கைகள் நடந்திருக்கும் என்பதை உறுதிசெய்ய தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதில் சில பயனர் கணக்குகளை விற்கவும் ஹேக் செய்தவர்கள் முயன்றிருக்கலாம் என்று யூகிக்கிறோம்.

இதில் 8 கணக்குகளின் விவரங்களை ஹேக்கர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இப்படிப் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள கணக்குகளின் உரிமையாளர்களை நாங்கள் தொடர்பு கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் கூறி வருகிறோம். இவற்றில் எந்தக் கணக்கும் ட்விட்டரால் அதிகாரப்பூர்வமானது என வெரிஃபை செய்யப்பட்டவை அல்ல. முடக்கப்பட்டிருக்கும் கணக்குகள் விரைவில் அந்தந்தப் பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories