உலகம்

“ரத்தம் வழியக் கிடந்தும் கண்டுகொள்ளாத கொடூரம்” - 75 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட போலிஸார் சஸ்பெண்ட்!

ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் முதியவர் ஒருவரை போலிஸார் கண்மூடித்தனமாக கீழே தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் முதியவர் ஒருவரை போலிஸார் கண்மூடித்தனமாக கீழே தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து முதியவரை கீழே தள்ளிவிட்ட 2 போலிஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் (46) என்பவரை கடந்த மே 25ம் தேதி மினியாபொலிஸ் காவல்துறை அதிகாரி ஒருவர் கழுத்தின் மீது தன் முழங்காலால் அழுத்தினார். மூச்சுவிடத் திணறிய ஃப்ளாய்ட் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலைக்கு நீதி கோரியும், கறுப்பினத்தவருக்கு எதிரான துவேஷத்தை எதிர்த்து, மக்கள் அமெரிக்க நகரங்களில் ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர்.

“ரத்தம் வழியக் கிடந்தும் கண்டுகொள்ளாத கொடூரம்” - 75 வயது முதியவரை கீழே தள்ளிவிட்ட போலிஸார் சஸ்பெண்ட்!

இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவலர்கள் அத்துமீறும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகி, போராட்டக்காரர்களை கொந்தளிக்கச் செய்து வருகின்றன. நியூயார்க்கில் உள்ள புஃபலோ நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை அமல்படுத்த நூற்றுக்கணக்கான போலிஸார் அணிவகுத்தனர்.

அப்போது அங்கு வந்த 75 வயது மதிக்கத்தக்க வெள்ளை இன முதியவரை, போலிஸார் கீழே தள்ளினர். நிலைகுலைந்து விழுந்த முதியவர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தபோதும், அவருக்கு உதவாமல் போலிஸார் கடந்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த வீடியோ போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.

போலிஸாரால் கீழே தள்ளப்பட்ட முதியவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முதியவரைக் கீழே தள்ளிய இரண்டு போலிஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக புஃபலோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories