உலகம்

“கொரோனா தொற்றினால் இந்த அறிகுறிகளும் ஏற்படலாம்” - அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை! #Covid19

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான CDC, கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸால் உலகமே தத்தளித்து வரும் சூழலில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான CDC, கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட முக்கால்வாசிப் பேருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் ஏற்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது.

கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான CDC, கொரோனா வைரஸ் தொற்றுக்கான புதிய அறிகுறிகளை கண்டுபிடித்துள்ளது.

“கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகு வெளியில் தெரிய ஆரம்பிக்கும்,” என்று சிடிசி குறிப்பிட்டுள்ளது.

புதிய அறிகுறிகளாக, உடல் மிகுந்த குளிர்ச்சியாக மாறி உதறத் தொடங்குவது, தசை வலி, தலை வலி மற்றும் சுவையோ அல்லது சுவாச உணர்வோ இருக்காது என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

“கொரோனா தொற்றினால் இந்த அறிகுறிகளும் ஏற்படலாம்” - அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை! #Covid19

கொரோனா வைரஸுக்கான புதிய அறிகுறிகளாக இவற்றை சிடிசி தெரிவித்திருந்தாலும், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பொதுவாக கொரோனா வைரஸ் இருந்தால், காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமென்று சிடிசி மற்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அதேநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் இவை தவிர தசை வலி உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படலாம் என சிடிசி விளக்கியுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் குறிப்பாக வயதானவர்கள், ரத்தக் கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் பிரச்னைகள், நீரிழிவு, புற்று நோய் உள்ளிட்ட ஆரோக்கியக் குறைபாடுகள் கொண்டவர்களின் மீது வீரியமாகச் செயல்படும் என எச்சரிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories