இந்தியா

“முஸ்லிம்கள் விற்கும் காய்கறிகளை வாங்காதீர்கள்” - கொரோனா நெருக்கடியில் உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு! 

கொரோனாவுக்கு இனம், மதம், சாதி என ஏதும் கிடையாது என பாஜகவின் தலைமை கூறி வந்தாலும், அதன் தொண்டர்கள் அபிமானிகள் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதை கண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

“முஸ்லிம்கள் விற்கும் காய்கறிகளை வாங்காதீர்கள்” - கொரோனா நெருக்கடியில் உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. தொடக்கத்தில் குறைவான தொற்று எண்ணிக்கையே உத்தர பிரதேசத்தில் இருந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக அது திடீரென அதிகரித்துள்ளது. இதுவரையில் அந்த மாநிலத்தில் 1986 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 357 பேர் மட்டுமே குணமாகியுள்ளனர்.

இப்படி இருக்கையில், பா.ஜ.கவினர் பலர் கொரோனா வைரஸ் பரவலுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று நாடெங்கும் வழக்கம் போல் வதந்திகளையும், பாசிசத்தையும் பரப்பி வருகின்றனர். ஆனால் அக்கட்சியின் தலைமைகளோ வைரஸுக்கு இனம், மதம், சாதி என ஏதும் இல்லையென பேசிவிட்டு அவ்வாறு இஸ்லாமியர்கள் மீது பழிபோடுவோரை கண்டிக்காமலும், தண்டிக்காமலும் பாசாங்கு காட்டி வருகிறது.

“முஸ்லிம்கள் விற்கும் காய்கறிகளை வாங்காதீர்கள்” - கொரோனா நெருக்கடியில் உ.பி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு! 

ஏற்கெனவே, குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுக்கு தனி வார்டும், இந்துக்களுக்கு தனி வார்டும் பிரிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினரே அதிகாரிகளிடமும், மக்களிடமும் இஸ்லாமியர்கள் விற்கும் காய்கறிகளை வாங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி, பலரது கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. தியோரியா மாவட்டத்தின் பஹ்ராஜ் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏவான சுரேஷ் திவாரியே மேற்குறிப்பிட்ட படி பேசியிருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகத்தினர் சுரேஷ் திவாரியை தொடர்புகொண்டு பேசிய போது, “இஸ்லாமியர்கள் தாங்கள் விற்கும் காய்கறிகளில் தங்களது உமிழ்நீரை தடவி கொரோனா வைரஸை பரப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் படியே அவ்வாறு கூறினேன்” பேசியிருக்கிறார்.

இதனையடுத்து, பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதியிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்து எந்த ஒப்புதலும் பிறப்பிக்கப்படவில்லை. சுரேஷ் திவாரி பேசியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறியிருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இக்கட்டான நிலையில், பாஜக ஆட்சியாளர்கள் இஸ்லாமிய வெறுப்பை மேலும் ஊற்றி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories