உலகம்

பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு... சீனாவின் பொருளாதாரத்தையும் நசுக்கிய ‘கொரோனா’!

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு... சீனாவின் பொருளாதாரத்தையும் நசுக்கிய ‘கொரோனா’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 717 பேர் பலியாகியுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால், சீனாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த லீ வெண்லியாங் என்ற மருத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரிப்பு... சீனாவின் பொருளாதாரத்தையும் நசுக்கிய ‘கொரோனா’!

இந்நிலையில் சீனாவில் நேற்று முன் தினம் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 73 பேர் பலியாகி பலி எண்ணிக்கை 636 ஆக அதிகரித்த நிலையில் நேற்று பலி எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் சீனாவுடன் ஏற்றுமதி - இறக்குமதி செய்யவே உலக நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதன் எதிரொலியாக சீனாவின் பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து சீனாவுக்கான நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இந்தியாவின் நகை மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவரான கோலின் ஷா தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories